Published : 25 Apr 2017 09:47 AM
Last Updated : 25 Apr 2017 09:47 AM
ராஜராஜ சோழனின் பாட்டி செம்பியன்மாதேவிக்கு ஆயிரம் கிலோவில் வடிக்கப்பட்ட ஐம் பொன் சிலை அடுத்த மாதம் 13-ம் தேதி திறக்கப்படுகிறது.
அரிஞ்சய சோழன், கண்ட ராதித்த சோழன், சுந்தர சோழன், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன், உத்தம சோழன் - இந்த ஆறு பேரரசர்களின் ஆட்சிக்கு ராஜ மாதவாக இருந்து வழிகாட்டியவர் செம்பியன் மாதேவி. இவர் பிறந்த ஊர் குறித்து பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டாலும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள செம்பியக்குடி மக்கள் செம்பியன் மாதேவி தங்கள் ஊரில் பிறந்தவர் என்று உறுதிபட நம்புகிறார்கள். அதனைப் போற்றும் வகையில், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து வாழ்ந்த அவருக்கு தங்கள் ஊரில் ஐம்பொன் சிலை எடுத்திருக்கிறார்கள்.
சிலை அமைப்புக் குழு
சிலை அமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் எஸ்.எம்.சந்திரசேகர் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “செம்பியன் மாதேவிக்கு சிலை வைக்க வேண்டும் என்பது ஊர் மக்கள் எடுத்த முடிவு. இதில் ஊர் மக்கள் அனைவரின் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்பதற்காக செம்பியக்குடியிலும் சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் சிலை அமைப்புக் குழுவினர் வீடு வீடாகச் சென்று ஐம்பொன் திரட்டினோம்.
இந்த முயற்சியில் நான்கரை பவுன் தங்கம், 150 கிலோ வெண்கலம், 10 கிலோ வெள்ளி உட்பட மொத்தம் ஆயிரம் கிலோவுக்கு ஐம்பொன் திரட் டப்பட்டது. பொன்னியின் செல் வன் நாவலை நாடகமாக அமைத் துக்கொண்டு இருக்கும் சென் னையைச் சேர்ந்த ஐ.டி. துறை இளைஞர்கள், சிலை அமைக்கும் விஷயம் அறிந்து 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்துச் சென்றார்கள்.
இவற்றைக் கொண்டு சுவாமி மலை தவசி சிற்பக் கூடத்தில் ஆறேமுக்கால் அடி உயரத்திலான செம்பியன் மாதேவியின் முழு உருவ ஐம்பொன் சிலை வடிக்கப்பட்டது. சுமார் 2 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய் செலவில் இந்தச் சிலை செய்து முடிக்கப்பட்டு, தற்போது எங்கள் ஊரில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. முதலில் சிலை மட்டும்தான் வைப்பதாக திட்டம். ஆனால் இப்போது, சிலை யும் மணிமண்டபமும் சேர்ந்தே அமைந்துவிட்டது. செம்பியன் மாதேவி பிறந்த தினமான சித்திரை மாதத்து கேட்டை நட்சத்திரத்தில் (மே 13) சிலையை திறக்க முடிவு செய்திருக்கிறோம்.
செம்பியன் மாதேவி பிறந்த நாள்
சிலைக்கு தினமும் மாலை அணிவித்து பூஜை செய்வதற்காக ‘செம்பியன் மாதேவி அறக்கட் டளை’ ஒன்றை உருவாக்கி இருக்கிறோம். இதில் அங்கத்தினர்களாகி இருக் கும் 365 பேரும் தலா ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்திருக்கிறார்கள். அந்தத் தொகை வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் மாத வட்டியில் இருந்து நித்திய பூஜைக்கான ஏற்பாடுகள் செய்யப்படும்.
எஸ்.எம்.சந்திரசேகர்
இனி ஆண்டுதோறும் செம்பியன் மாதேவி பிறந்த நாளானது ஊர் திருவிழாவாகக் கொண்டாடப்படும். தேவாரம், திருவாசகத்தை சொல் லிக் கொடுப்பதற்காக இங்கே ஒரு இசைப் பள்ளியை ஆரம்பிக்கும் திட்டமும் இருக்கிறது. செம்பியன் மாதேவியை போலவே, பெருமை சேர்த்த பெருமக்கள் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு ஒவ்வொரு ஊரிலும் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தேடிக் கண்டுபிடித்து கொண்டாடும் வகை யில் ஒவ்வொருவரும் தங்களது ஊரைத் திரும்பிப் பார்க்க வேண்டும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT