Published : 04 Mar 2017 10:40 AM
Last Updated : 04 Mar 2017 10:40 AM
தமிழகத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரியில் வேதியியல் துறை உதவிப் பேராசிரியையாக பணியாற்றிவரும் ஜே.மார்கரட் மரி ‘தி இந்து’-வுக்கு அளித்த சிறப்பு பேட்டி:
ஹைட்ரோ கார்பன் என்றால் என்ன?
ஹைட்ரஜன் மற்றும் கார்பன் அணுக்கள் இணைந்த கூட்டு மூலக் கூறுதான் ஹைட்ரோ கார்பன். நிலக்கரியில் கார்பன் மட்டுமே இருக்கும். ஹைட்ரோ கார்பன் என்பது கார்பன் மூலக்கூறின் எண் ணிக்கையைப் பொறுத்து, மீத்தேன், புரோபேன், பியூட்டேன் என பல விதமாக அழைக்கப்படுகிறது. கச்சா எண்ணெய், இயற்கை எரி வாயு, பெட்ரோலியம் ஆகியவை அனைத்தும் ஹைட்ரோ கார்பன் தான். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காடுகள் அழிந்து படிமங்களாக மாறும்போது, அதிலிருந்து வெளியேறும் வாயுதான் ஹைட்ரோ கார்பன். இது அழுத்தம் காரணமாக மெல்லிய திரவமாக மாறி நிலக்கரி படிமங்கள் மீது படிந்திருக்கும். இதை வெளியில் எடுத்து உலகம் முழுக்க எரிவாயுவாக பயன்படுத்து கின்றனர்.
காவிரிப் படுகையில் ஹைட்ரோ கார்பன் எடுப்பது நாட்டுக்கு அவசிய மான திட்டமா?
வீடுகள், வாகனங்களில் நாம் எரிவாயு பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நம் தேவையின் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்கு மதி செய்யப்படுகிறது. எனவே, உள்நாட்டில் இதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா என்று ஆராயும் பணி நீண்டகாலமாக நடந்து வருகிறது. அதுதான் நெடுவாசலில் நடந்துள்ளது. நிலக்கரிப் படிமங் களின் மீது ‘adsorption' எனப்படும் பரப்புக் கவர்ச்சி மூலம் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இந்த ஹைட்ரோ கார்பன். அங்கு கிடைக் கும் ஹைட்ரோ கார்பன் எந்த அளவுக்கு தரமானது என்பது கேள்விக்குறியானது. ஏனென்றால், நிலக்கரியின் தரத்தைப் பொறுத்து தான் இதன் தரமும் அமையும். நிலக்கரியைப் பொறுத்தமட்டில், 1. ஆந்த்ரோசைட் 2. பிட்டுமினஸ் 3. லிக்னைட் 4. பீட் என நான்கு தரம் உள்ளது. இதில், தமிழகத்தில் கிடைப்பது மூன்றாம் தரமான லிக்னைட்தான். இதிலிருந்து கிடைக்கும் மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பன் எரிவாயு எந்த அளவுக்கு தரம் மிக்கது என்பது தெரியவில்லை. இதை எடுப்பதில் தவறில்லை. எடுக்கும் முறையில் தான் பிரச்சினை உள்ளது.
மீத்தேன் உள்ளிட்ட ஹைட்ரோ கார்பனை வெளியில் எடுக்கும்போது என்ன பிரச்சினைகளை சந்திக்க வேண்டியது வரும்?
நிலக்கரியுடன் ஒட்டிக் கொண்டி ருக்கும் நீரை வெளியில் எடுத்தால் மட்டுமே பரப்புக் கவர்ச்சியால் சிக்கிக் கொண்டிருக்கும் எரிவாயு வெளியேறும். தண்ணீரை வெளி யேற்றுவது மிகப்பெரிய சுற்றுச் சூழல் பிரச்சினை. பல இடங்களில் துளையிட்டு அழுத்தம் கொடுத்து தண்ணீரை வெளியேற்ற வேண்டி யது வரும். இந்த தண்ணீர் எதற்கும் உதவாது. குடிநீராக பயன் படாது. உப்புத் தன்மை அதிகம் என்பதால் விவசாயத்துக்கும் பயன் படுத்த முடியாது. சுத்திகரிக்கவும் முடியாது. இந்த நீரை உறிஞ்சி வெளியில் விட்டால், விவசாய நிலம் பாதிப்படைந்து எதற்கும் பயன்படாது. இது மிக முக்கிய மான பிரச்சினை. இதுதவிர, நிலப் பகுதியை துளையிட்டு அழுத்தம் கொடுக்கும்போதுதான் எரிவாயு வெளியேறும். இவ்வாறு துளை யிடும்போது நிலத்தின் கீழ் பகுதியில் ஏற்படும் விரிசல்களால் நிலத்தடி நீரில் வேதிப் பொருட்கள் கலந்து நிலத்தடி நீர் பாதிப்புக்கு உள்ளாகும். நன்னீர் ஆதாரங்களும் பாதிப்படையும். இது அடுத்த பிரச் சினை.
இதுதவிர, நிலத்தின் அடிமட் டத்தில் இருந்து நீரை வெளியேற் றும்போது நிலத்தில் ஏற்படும் வெற்றிடம், நில அமைப்பை மாற்றி அமைத்துவிடும். பாறை அடுக்கு களில் ஏற்படும் மாற்றம் நிலநடுக்கம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு.
அமெரிக்காவில் இயற்கை எரி வாயு எடுக்கப்படுகிறது. பெரும் பாலான நாடுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. மத்திய கிழக்கு நாடுகளில் விவசாய நிலம் இல்லை என்பதால், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு எடுப்ப தால் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லை. ஆனால், காவிரிப் படுகை யில் விவசாய நிலம் இருப்பதால் நிச்சயம் பாதிப்பு இருக்கும்.
விவசாய நிலத்தை அழித்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் அளவுக்கு இது முக்கியமான வளர்ச்சி திட்டமா?
நிச்சயமாக இல்லை. விவசாயம் தான் நாட்டுக்கு முக்கியம். நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் பங்களிப்பது விவசாயம். காவிரிப் படுகையில் உள்ள விவசாய நிலம் தமிழகத்தின் வளம். எனவே, விவசாயத்துக்குதான் முதல் மரியாதை அளிக்க வேண்டும். எந்த திட்டத்துக்காகவும் விவசாயத்தை அழிக்கக்கூடாது.
பல கட்டங்களாக நடைபெறும் திட்ட ஒப்பந்த விவரம்
கால அளவு: மூன்று ஆண்டுகள் + தலா 6 மாதங்கள் என மூன்று நீட்டிப்பு.
முக்கிய பணி: துளையிடுதல் மற்றும் ஆய்வுக் கிணறுகள் அமைத்தல்.
இரண்டாம் கட்டம்: ஆரம்ப மதிப்பீடுகள் நடத்தும் பணி
கால அளவு: 5 ஆண்டுகள் + தலா 6 மாதங்கள் என மூன்று நீட்டிப்பு
முக்கிய பணி: ஆரம்ப கட்ட கிணறுகள் தோண்டுதல், சுற்றுச்சூழல் ஆய்வு, தொழில்நுட்ப மற்றும் பொருளாதார மதிப்பீடு தயாரித்தல், சந்தை ஆய்வு.
மூன்றாம் கட்டம்: வளர்ச்சிப் பணி
கால அளவு: 5 ஆண்டுகள் + ஓர் ஆண்டு நீட்டிப்பு
முக்கிய பணி: துளையிடுதல், கிணறுகள் தோண்டும் பணி ஆய்வு மற்றும் நிறைவு.
நான்காம் கட்டம்: உற்பத்தி பணி
கால அளவு: 25 ஆண்டுகள்.
முக்கிய பணி: நிலக்கரிப் படுகையில் இருந்து வர்த்தக ரீதியிலான எரிவாயு உற்பத்தி.
இரண்டாம் கட்ட பணிகளுக்குப் பின்னர் சிபிஎம் (கோல் பெட் மீத்தேன்) திட்ட ஒப்பந்ததாரர் உற்பத்தி கிணறுகள் தோண்டும் பணிக் காக 5 ஆண்டுகள் எடுத்துக் கொள்ளலாம். எனவே, மொத்த திட்ட காலம் 3+5+5= 13 ஆண்டுகள். மத்திய, மாநில அரசுகள் அனுமதி அளிப் பதைப் பொறுத்து இந்த கால அளவில் மாற்றங்கள் இருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT