Published : 25 Jan 2017 08:18 AM
Last Updated : 25 Jan 2017 08:18 AM
ஜல்லிக்கட்டு நடத்த வழி வகை செய்யும் விதமாக மிருக வதை தடுப்புச் சட்டத்தில் சிறப்பாக திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்று முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் கூறினார்.
ஜல்லிக்கட்டு நடத்து வதற்கு ஏற்ப மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய் வதற்கான சட்டத் திருத்த மசோதா நேற்று முன்தினம் நடந்த தமிழக சட்டப் பேரவைக் கூட்டத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதுதொடர்பாக முன்னாள் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பி.வில்சன் கூறியதாவது:
தற்போது அவசரச் சட்டம் மூலம் 1960-ம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதில் 2, 3, 11, 27 ஆகிய பிரிவு களில் திருத்தங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. இதில், எவையெல் லாம் மிருகவதை என்பதன் கீழ் வராது என்று கூறும் 1960 மிருக வதை தடுப்பு சட்டப்பிரிவு 11 (3)-ல் புதிதாக (f) என்ற பிரிவு சேர்க்கப் பட்டுள்ளது.
அதில், பாரம்பரியம், பண் பாட்டைப் பின்பற்றி முன்னேற்றும் நோக்கத்துடன், சொந்த மண்ணின் காளைகள் உயிர் வாழ்வதையும், அவை தொடர்ந்து நன்றாக இருப் பதையும் உறுதிசெய்யும் நோக் கத்துடன் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், மிருகவதை யில் இருந்து விலக்கு அளிப்பது தொடர்பான சட்டப்பிரிவு 27-ல் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர, மிருகவதை தடுப்புச் சட்டப்பிரிவு 28-க்குப் பிறகு 28 (A) என்ற புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. அதில், ‘ஜல்லிக்கட்டு நடத்துவது இந்த சட்டத்தின் வேறு எந்த பிரிவுகளின்படியும் குற்றமாக கருதப்படமாட்டாது’ என தெரி விக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சிறப்பாக சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பிறப் பித்த தீர்ப்பை ரத்து செய்வதுபோல இந்தச் சட்டம் உள்ளது. இதை உச்ச நீதிமன்றம் எவ்வாறு அணு கப்போகிறது என்பதை பொறுத்தி ருந்துதான் பார்க்க வேண்டும்.
மேலும், இந்தச் சட்டத் திருத் தம் 2017 ஜனவரி 21-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டுள் ளது. அதற்குப் பதிலாக, 1960 மிருக வதை தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்ட தேதியில் இருந்து இந்தச் சட்டத் திருத்தமும் அமலுக்கு வருவதாக முன்தேதியிட்டு குறிப் பிட்டிருந்தால் சட்டத்துக்கு கூடுதல் வலு சேர்ந்திருக்கும். சட்டத் திருத்தத்தை முன்தேதியிட்டுக் கொண்டுவர சட்டப்பேரவைக்கு தனி அதிகாரம் உள்ளது. மேலும், இந்தச் சட்டத்தை இந்திய அரசியலமைப்புச் சட்டம் 31-பி பிரிவின் 9-வது அட்டவணையில் சேர்த்தால் கூடுதல் பாதுகாப்பு பெற முடியும்.
இவ்வாறு பி.வில்சன் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT