Published : 07 Feb 2014 09:50 AM
Last Updated : 07 Feb 2014 09:50 AM
தமிழக காவல் துறையைச் சேர்ந்த 7 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்றம் செய்யப்பட் டுள்ளனர். தேர்தல் பிரிவு ஐ.ஜி.யாக எஸ்.என்.சேஷசாயி இடமாற்றம் செய்யப் பட்டுள்ளார்.
முதன்மைச் செயலாளரான அபூர்வா வர்மா வியாழக்கிழமை இதற்கான உத்தரவை வெளியிட்டார். விவரம் வருமாறு:
அமலாக்கத்துறை ஐ.ஜி.யாக உள்ள எஸ்.என்.ஷேசாயி புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சென்னை தேர்தல் பிரிவு ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாநகர காவல்துறை ஆணையர் என்.கே.செந்தாமரைக்கண்ணன் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சென்னை தேர்தல் பிரிவு டி.ஐ.ஜி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த விஜயேந்திரா எஸ்.பிதாரி மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த வி.பாலகிருஷ்ணன் மயிலாப்பூர் காவல் துணை ஆணையராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மயிலாப்பூர் காவல் துணை ஆணையராக பணியாற்றிய கே.எஸ்.நரேந்திரன் நாயர் நெல்லை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த எஸ்.ஆர்.செந்தில்குமார் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும், நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த பி.கண்ணம்மாள் கிருஷ் ணகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப் பட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT