Published : 13 Feb 2014 11:23 AM
Last Updated : 13 Feb 2014 11:23 AM
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படவில்லை.
தமிழக சட்டப்பேரவையில் 2014-2015 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிவிப்புகளின் முக்கிய அம்சங்கள்:
2014-15 -ம் ஆண்டில் திட்ட ஒதுக்கீடு 42,185 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. |
ஓய்வூதியப் பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவியாக ரூ.4,000 பராமரிப்பு உதவித் தொகை அளித்திட அரசு முடிவு செய்துள்ளது. |
தேவைப்படும் இடங்களில், 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும். |
திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
மாநிலத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி அளித்திட, பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.17,731.71 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
கடுமையான நோய் இருப்பதாக கண்டறியப்படும் குழந்தைகளை மருத்துவமனை சிகிச்சைக்கு பரிந்துரைக்கும் சேவைகளை அளித்திட, மாவட்டந்தோறும் ஒரு ஆரம்ப நிலை சிகிச்சை மையம் நிறுவப்படும். |
அடிப்படைத் தேவைகள் திட்டத்திற்காக 186.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதிக்காக ரூ.3,734 கோடி நிதி ஒதுக்கீடு. |
கிராமங்களில் திடக் கழிவு மேலாண்மைக்காக, ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு |
உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிப் பங்கீட்டிற்காக 5,168.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
சென்னை பேருந்துப் போக்குவரத்தின் திறனை உயர்த்த, ஜி.பி.எஸ். வசதியுடன் கூடிய ஒருங்கிணைந்த பேருந்து தகவல் அமைப்பு முறை செயல்படுத்தப்படும். |
ஜவஹர்லால்நேரு தேசிய நகந்ப்புர புனரமைப்புத் திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில் 200 கோடி ரூபாய் செலவில் பழைய பேருந்துகளை மாற்ற 1,000 புதிய பேருந்துகள் வாங்கப்படும். |
சாலை கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு ரூ.2,800 கோடி ரூபாயாக மேலும் உயர்த்தப்படும். 1,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை அகலப்படுத்தவும், 3,500 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். |
கே.எப்.டபுள்யூ. என்ற ஜெர்மன் நாட்டு நிதி நிறுவனத்தின் உதவியோடு, காற்றாலை மின்சாரத்தை வெளியேற்றிடத் தேவையான பசுமை மின்சக்தி வழித்தடங்களை ரூ.1,593 கோடி மதிப்பீட்டில் அமைக்க தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் நடவடிக்கை. |
பாரம்பரிய நீந்நிலைகளைச் சீரமைப்பதற்காக 160 பணிகளை மேற்கொள்ள, ரூ.86.28 கோடி நிதி ஒதுக்கீடு. |
ஏற்கெனவே கூட்டுறவுத் துறையால் நடத்தப்படும் 210 மருந்தகங்களுடன் கூடுதலாக 100 அம்மா மருந்தகங்கள் புதியதாகத் தொடங்கப்படும். |
நபார்டு மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம் கீழ் உள்ள நிதியைப் பயன்படுத்தி பல்வேறு பால் பண்ணைகளின் திறனை உயர்த்த ரூ. 198.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. |
1.5 லட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா செம்மறி ஆடுகளும், வெள்ளாடுகளும் வழங்க ரூ. 198.25 கோடி ஒதுக்கீடு. |
பயிர்க் காப்பீட்டிற்காக ரூ.242.54 கோடி நிதி ஒதுக்கீடு. |
தேசியத் தோட்டக்கலை இயக்கம் 22 மாவட்டங்களில் ரூ115 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். |
தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 323 கோடி ரூபாய் செலவில் பல்வேறு துணைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். |
நீலகிரி மாவட்டத்தின் சிறப்புத் தேவைகளை நிறைவு செய்வதற்காக, உதகமண்டலத்தைத் தலைமையிடமாகக் கொண்ட புதிய வருவாய்க் கோட்டம் உருவாக்கப்படும். |
சென்னை மாநகரத்தில் மேலும் 200 பொதுச் சேவை மையங்கள் தொடங்கப்படுவதுடன் மற்ற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேருராட்சிகளுக்கும் இத்தகைய வசதிகள் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். |
கூடுதலாக, 2,000 பொதுச் சேவை மையங்கள் தனியார்-பொது பங்களிப்பு முறையில் தொடங்கப்படும். |
புதுவாழ்வுத் திட்டத்திற்காக ரூ.49.05 கோடி நிதி ஒதுக்கீடு. |
தமிழ்நாடு மாநில கிராமப்புற வாழ்வாதார இயக்கத்திற்கென ரூ.253.92 கோடி நிதி ஒதுக்கீடு. |
மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்வு. |
12,000 பயணாளிகளுக்கு விலையில்லா கறவை மாடுகள் வழங்கப்படும். |
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கு ரூ.105 கோடி நிதி ஒதுக்கீடு. |
ரூ. 2.8 கோடி செலவில் தமிழகத்தில் புதிதாக 10 கல்லூரி விடுதிகள் கட்டப்படும். |
சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் வரும் அக்டோபரில் நடத்தப்படும். இதற்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். |
36,233 மதிய உணவு மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு அல்லது நீராவி சமையல் அடுப்பு வழங்கப்படும். |
35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி வழங்கப்படும். |
ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.1,475.42 கோடி நிதி ஒதுக்கீடு. |
உழவர் பாதுகாப்பு உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்கு ரூ.4,200 கோடி நிதி ஒதுக்கீடு. |
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்திற்கு நடப்பாண்டில் ரூ.716.77 கோடி நிதி ஒதுக்கீடு. |
சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.55.53 கோடி நிதி ஒதுக்கீடு. |
திருநெல்வேலி மாநகராட்சி கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்க ரூ. 133 கோடி நிதி ஒதுக்கீடு. |
விளையாட்டு வீரர் விடுதிகள், கட்டமைப்புகளுக்கு ரூ. 146.64 கோடி நிதி ஒதுக்கீடு. |
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் மூலம் ரூ.197.10 கோடியில் 1747 குடியிருப்புகள் கட்டப்படும். |
சென்னை மாநகராட்சியில் புதிதாக 20 நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். |
தஞ்சை, நெல்லை மாவட்டங்களில் ரூ.300 கோடி செலவில் நவீன விபத்து சிகிச்சை அமைக்கப்படும். |
வரும் நிதியாண்டில் ரூ.1110 கோடி நிதி ஒதுக்கீட்டில் 5.5 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படும். உயர்கல்வித் துறைக்கு ரூ.3627.93 கோடி நிதி ஒதுக்கீடு. |
தமிழகம் முழுவதும் 118 ஆரம்ப சுகாதார மையங்கள் அமைக்கப்படும். 64 ஆரம்ப சுகாதார மையங்கள் மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும். 770 நடமாடும் மருத்துவக்குழுக்கள் அமைக்கப்படும். சென்னை, ஸ்டான்லி மருத்துவமனை சிறப்பு பிரிவுக்கு ரூ.75 கோடியில் பலமாடி கட்டடம் கட்டப்படும். |
சென்னை, ஈரோடு, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 11 இடங்களில் வீட்டு வசதிவாரிய குடியிருப்புகள் அமைக்கப்படும். |
தேசிய ஊரக குடிநீர் திட்டத்திற்கு மாநில அரசின் பங்கிற்காக ரூ.700 கோடி ஒதுக்கீடு. |
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிலை மேம்படுத்த ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு. |
இந்திரா வீட்டுவசதி திட்டத்தில் நடப்பாண்டில் 1,6,000 வீடுகள் அமைக்கப்படும். |
விலையில்லா வேட்டி சேலைகள் வழங்க ரூ.499.16 கோடி நிதி ஒதுக்கீடு. நெசவாளர்களுக்கான பசுமை வீடுகளுக்கு கூடுதலாக ரூ.168 கோடி நிதி ஒதுக்கீடு. |
சூரிய ஒளி மின்சக்தி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. 60 ஆயிரம் சூரிய ஒளி மின்சக்தி தெருவிளக்குகள் அமைக்க ரூ.46.58 கோடி நிதி ஒதுக்கீடு. சூரிய ஒளி மின்சக்தி கொண்ட 60,000 பசுமை வீடுகளுக்கு 1,260 கோடி ரூபாய் ஒதுக்கீடு. |
திறன் மேம்பாட்டு இயக்கத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு. இளைஞர்கள் திறனை மேம்படுத்த நெல்லை, திருவள்ளூரில் மையங்கள் அமைக்கப்படும். |
போக்குவரத்து கழகங்களுக்கு டீசல் மானியமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு. சென்னையில் புதிய நுண்ணறிவுப் போக்குவரத்து அமைப்பு ஏற்படுத்தப்படும். இதன் மூலம் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு ஏற்படும். |
தமிழ்நாடு மின்உற்பத்தி, பகிர்மான கழகத்தின் ரூ.2000 கோடி கடனை தமிழக அரசே ஏற்கும் என அறிவிப்பு. |
கூவம் நதியை சீரமைக்க ரூ.3,833.62 கோடியில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இத்திட்டம் 5 ஆண்டுகளில் முடிக்கப்படும். திட்ட செயலாக்கத்தின்போது பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுகுடியமர்த்தம் செய்ய ரூ. 2.077 கோடி ஒதுக்கீடு. |
தமிழகத்தில் உள்ள நதிகளை இணைக்க ரூ.119.98 கோடி நிதி ஒதுக்கீடு. அணைகள் புனரமைப்புக்கு ரூ.329.65 கோடி நிதி ஒதுக்கீடு. |
மீனவர்களுக்கு நிவாரண நிதி: மீன்பிடி தடைக்காலங்களில் மீனவர்களின் நிவாரணத்திற்காக வழங்க ரூ.105 கோடி ஒதுக்கீடு. பூம்புகாரில் புதிய மீன்பிடி துறைமுகம் கட்டப்பட்டு வருகிறது. |
வேளாண் வளர்ச்சி திட்டங்கள்: வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்துக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு. திருத்திய நெல் சாகுபடி முறை 3 லட்சம் ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும். |
குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.681 கோடி செலவில் குடிநீர் தொகுப்பு அமைக்கப்படும். |
4887 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்படும். |
பேரிடர் சமாளிப்புத் திட்டத்திற்கு ரூ.106.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். |
தமிழ் வளர்ச்சிக்கு ரூ.39.29 கோடி நிதி ஒதுக்கீடு. தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்திற்கு ரூ.6.55 கோடி நிதி ஒதுக்கீடு. |
தமிழகம் முழுவதும் ஆதரவற்றோருக்கு 65 புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும். |
சென்னையில் 10 இடங்களில் நவீன வரி வசூல், கட்டண வசூல் மையம் அமைக்கப்படும். |
நீதிமன்ற நிர்வாக மேம்பாட்டுக்கு ரூ.783.02 கோடி ஒதுக்கீடு. |
தமிழக சிறைச்சாலைகளை சீரமைக்க ரூ.194.66 கோடி நிதி ஒதுக்கீடு. |
சாலைப் பாதுகாப்பிற்கு ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு. |
தீயணைப்பு, மீட்புபணிகள் துறைக்கு ரூ.189.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. |
காவல்நிலைய கட்டிடங்கள், குடியிருப்புகள் கட்ட ரூ.571 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
சட்டம் ஒழுங்கு: காவல் துறைக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5,168 கோடியாக அதிகரிப்பு. புகார் மனுக்களை இணையதளம் மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. |
2014-2015 ஆம் ஆண்டிற்கான தமிழக திட்ட செலவினமாக ரூ. 42,185 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப் பேரவையில் அறிவித்தார். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT