Published : 05 Jan 2017 10:09 AM
Last Updated : 05 Jan 2017 10:09 AM
பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்ட நிலையில், விவசாயிகளிடம் கொள்முதல் செய்யும் கரும்புக்கு கட்டுப்படியான விலையை வழங்க வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் அரிசி பெறும் ரேஷன் கார்டுதாரர்கள், போலீஸ் ரேஷன் கார்டுதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்வாசி ரேஷன் கார்டு தாரர்கள் ஆகியோருக்கு பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை தமிழக அரசு வழங்கி வருகிறது.
பச்சரிசி, சர்க்கரை ஆகிய வற்றுடன் 2 அடி நீள கரும்புத் துண்டு மற்றும் ரூ.100 ஆகியன கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. நிகழாண்டும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு குறித்த அரசின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முந்திரி, திராட்சை, ஏலக்காய் ஆகியவற் றுடன் கரும்புத் துண்டு ஒன்று வழங்கப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இதனால், 1.80 கோடி குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. ஆனால், சிறப்பு பரிசுத் தொகுப்பில் ரொக்கப் பரிசு குறித்த அறிவிப்பு இல்லை.
இந்நிலையில், பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்புக்காக கரும்பு கொள்முதல் செய்யும்போது விவ சாயிகளுக்கு கட்டுப்படியான விலையை அரசு அளிக்க வேண் டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் ஒருங் கிணைப்புக் குழுத் தலை வர் பி.ஆர்.பாண்டியன் கூறிய போது, “விவசாயிகளின் கோரிக் கையை ஏற்று, பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு குறித்த அறி விப்பை அரசு வெளியிட்டுள்ளது மகிழ்ச்சி. வறட்சியால் பாதிக்கப்பட் டுள்ள நிலையில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், இடைத்தரகர் இல்லாமல் நேரடியாக விவசாயிக ளிடம் கட்டுப்படியான விலைக்கு கரும்பை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம், வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு உரிய அறிவுறுத்தல் வழங்க வேண்டும்” என்றார்.
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாக்கண்ணு கூறியபோது, “கரும்பை அடி கணக்கில் கொள்முதல் செய்யும் போது, மிஞ்சும் கரும்புத் துண்டு களை விவசாயிகளால் விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படு கிறது. எனவே, அடி கணக்கில் கொள்முதல் செய்யாமல், முழு கரும்பு என்ற அளவில் கட்டுப் படியான விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.
தமாகா விவசாய அணி மாநிலத் தலைவர் புலியூர் நாகராஜன் கூறியபோது, “செங்கரும்புச் சாகுபடி பரப்பு நிகழாண்டு வெகுவாகக் குறைந்துள்ள நிலை யில், விவசாயிகளுக்கு கட்டுப்படி யாகும் விலைக்கு அரசே நேரடியாக கரும்பை கொள்முதல் செய்ய வேண்டும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT