Published : 11 Mar 2014 02:00 PM
Last Updated : 11 Mar 2014 02:00 PM
திமுக வேட்பாளர் பட்டியலில் மு.க.அழகிரியின் தீவிர விசுவாசியான ரத்னவேலுக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்தக சபையின் தலைவராக இருந்து, தற்போது முதுநிலை தலைவராக இருப்பவர் ரத்னவேல். இவரை விருதுநகர் தொகுதிக்கு வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக.
முழுநேர அரசியல்வாதி இல்லை என்றபோதும் திமுக முகாமில் குறிப்பாக மு.க.அழகிரியோடு நெருக்கமான நட்பில் இருப்பவர். இந்த நட்பின் வெளிப்பாடாகத்தான் கடந்த திமுக ஆட்சியின்போது, ‘அப்பாவுக்கு தப்பாது பிறந்த பிள்ளை’ என்று அழகிரியைப் புகழ்ந்து புத்தகம் எழுதி வெளியிட்டார் ரத்னவேல். அப்போதே, இவர் ராஜ்யசபா சீட்டுக்கு அடிபோடுவதாக பேச்சு கிளம்பியது. ஆனால், அது நடக்கவில்லை.
ஆட்சி மாறியதும் அடக்கி வாசித்த ரத்னவேல், இப்போது வேட்பாளராகி நேரடி அரசியல் அவதாரம் எடுத்திருக்கிறார். “அதுசரி, விருதுநகர் தொகுதியில் போட்டியிட முழுநேர அரசியல்வாதி யாரும் கிடைக்கவில்லையா?’’ என்று விருதுநகர் மாவட்ட திமுக வட்டாரத்தில் விசாரித்தபோது, ’’முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணனை அதிமுக நிறுத்தி இருக்கிறது.
பாஜக அணியில் நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவரான வைகோ நிற்பது உறுதியாகிவிட்டது. இந்நிலையில் நாடார் ஒருவரை களமிறக்கினால் திமுக-வுக்கு வெற்றிவாய்ப்பு கிடைக்கலாம் என்று கணக்குப் போட்டார் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அண்ணாச்சி.
இதற்காக சிவகாசியில் உள்ள பிரபல ஃபயர் ஒர்க்ஸ் குடும்பத்து வாரிசு ஒருவரை கட்சியில் சேர்த்து களமிறக்க பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், அந்தத் தரப்பில் சம்மதிக்கவில்லை.
அப்புறம்தான் ரத்னவேலை தேடிப் பிடித்தார் அண்ணாச்சி. ரத்னவேலை அழைத்துக் கொண்டு வெள்ளிக்
கிழமை அவசரமாய் சென்னைக்குப் போனார். வேட்பாளராக்கி விட்டார். ரத்னவேல் விருப்ப மனு கொடுத்தாரா, நேர்காணல் நடந்துச்சான்னு எல்லாம் எங்களைக் கேட்காதீர்கள். ஆனா, அரசியல்வாதிகளே ஆலாய் பறக்கும்போது, அரசியல் படிக்காத ரத்னவேலை கரைசேர்க்க அண்ணாச்சி ரொம்பவே சிரமப்பட வேண்டியிருக்கும்’’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT