Published : 20 Jun 2015 08:38 AM
Last Updated : 20 Jun 2015 08:38 AM

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு: 23 மாணவர்கள் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் - பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்குகிறது

பொறியியல் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. கல்விப் பிரிவில் 15 மாணவர்கள், தொழிற்கல்வி பிரிவில் 8 பேர் என மொத்தம் 23 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் எடுத்துள்ளனர்.

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேர ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 238 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 95 ஆயிரத்து 300 பேர் மாணவர்கள். 58 ஆயிரத்து 938 பேர் மாணவிகள். அவர்கள் அனைவருக்கும் ரேண்டம் எண் கடந்த 15-ம் தேதி ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்த நிலையில், தரவரிசைப் பட்டியல் (ரேங்க் லிஸ்ட்) வெளியிடும் நிகழ்ச்சி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக தேர்வு மையத்தில் நேற்று நடந்தது. பல்கலைக்கழகத் துணைவேந்தர் எம்.ராஜாராம், பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் வி.ரைமண்ட் உத்தரியராஜ் ஆகியோர் முன்னிலையில் தமிழக உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா, தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அப்போது பல்கலைக்கழக இயக்குநர்கள் ஜி.நாகராஜன் (மாணவர் சேர்க்கை), எஸ்.ராஜேந்திரபூபதி (நுழைவுத் தேர்வுகள்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu/tnea2015/) தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டால், பொது தரவரிசை, இடஒதுக்கீடு தரவரிசை, கலந்தாய்வு நாள், நேரம் ஆகிய விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

தரவரிசைப் பட்டியலின்படி, கல்விப் பிரிவில் (அகடெமிக்) 15 பேர், தொழிற்கல்வி பிரிவில் 8 பேர் என மொத்தம் 23 பேர் 200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றுள்ளனர். இதன்மூலம் அவர்களுக்கு அவர்கள் விரும் பும் கல்லூரியும் விரும்புகிற பாடப் பிரிவும் உறுதியாக கிடைக்கும் என்பது குறிப்பிடத் தக்கது. தரவரி சைப் பட்டியலில் முதல் மாணவராக கோவை சூலூரைச் சேர்ந்த டி.கீர்த்திபாலன், 2-வது மாணவராக தருமபுரி அரூரைச் சேர்ந்த கே.நிஷாந்த்ராஜன், 3-வதாக திருச்சி மாவட்டம் நாச்சிக்குறிச்சியைச் சேர்ந்த எம்.முகேஷ் கண்ணன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவருமே பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

மாணவர்களுக்கு கலந்தாய்வுக்கான அழைப்புக் கடிதம் அனுப்பும் பணி தொடங்கப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்தார். ஏற்கெனவே அறிவிக்கப் பட்டபடி, விளையாட்டுப் பிரிவு மாணவர் களுக்கான கலந்தாய்வு 28-ம் தேதியும், மாற்றுத்திறனாளிகளுக்கான கலந் தாய்வு 29-ம் தேதியும் நடைபெற உள்ளன.

இதைத்தொடர்ந்து, ஒட்டுமொத்த பொது கலந்தாய்வு ஜூலை 1-ம் தேதி தொடங்கி, 31-ம் தேதி முடிவடையும். தினமும் 8 அமர்வு களாக நடைபெறும் இந்த கலந்தாய்வில் ஒரு நாளுக்கு 6 ஆயிரம் மாணவ, மாணவிகள் அனுமதிக் கப்படுவார்கள். கலந்தாய்வுக்கான அனைத்து முன்னேற் பாடுகளும் அண்ணா பல்கலைக் கழகத்தில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

கலந்தாய்வுக்கு வரும் வெளியூர் மாணவர் களுக்கு வசதியாக பிரம்மாண்டமான கூடம் அமைக்கப்பட்டுள்ளது. குடிநீர், குளிக்கும் வசதி, கழிப்பிட வசதி, கேன்டீன் உட்பட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப் பட்டுள்ளன. உடனடி கல்விக் கடனுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் வங்கிகளுக்கான சிறப்பு கவுன்ட்டர்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

பொறியியல் படிப்பு தரவரிசைப் பட்டியல்

200-க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றவர்கள்

1. டி.கீர்த்திபாலன், சூளூர், கோவை, 2. கே.நிஷாந்த்ராஜன், டிவிகே நகர், அரூர், தருமபுரி, 3. எம்.முகேஷ் கண்ணன், நாச்சிக்குறிச்சி, சோமரசம்பேட்டை திருச்சி, 4. ஜி.நிவாஷ், வேங்கமேடு, நாமக்கல், 5. எஸ்.சரவணகுமார், ஆலப்பாக்கம், சென்னை, 6. சி.கிரிதரன், வெல்லத்தோட்டம், அவினாசி, 7. பி.பிரவீன்குமார், உளூந்தூர்பேட்டை, விழுப்புரம், 8. பி.மோனிஷ், கன்னடிப்பாளையம், பவானி, ஈரோடு, 9. எம்.மோகன்குமார், தொட்டிப்பாளையம், பவானி, ஈரோடு, 10. எஸ்.இ.விக்னேஸ்வரன், சென்னாயக்கனூர், ஈரோடு, 11. ஜெ.கார்த்திக் ராஜா, திருச்செங்கோடு, நாமக்கல், 12. என்.ராம் அஸ்வெந்த், திண்டல், ஈரோடு, 13. எஸ்.எம்.சுஹைல் அஹமது, தபால் தந்தி நகர், மதுரை, 14. வி.எம்.இசைப்பிரியா, ஆத்தூர், சேலம், 15. சி.தனசேகர், கரையான்காடு, கொல்லிமலை.

தொழிற்கல்வி பிரிவு

1. என்.மனோஜ், காரமடை, கோவை, 2. ஜெ.விஷ்ணு, கொமராப்பாளையம்

3. எஸ்.தினேஷ்குமார், சிக்கரசம்பாளையம், சத்தியமங்கலம், 4. எஸ்.ரோஹிந்த் போஸ், ஆர்.எம்.காலனி, திண்டுக்கல், 5. எம்.கோகுல், மாதவரம், சென்னை, 6. டி.ஷர்வஜெத், புது கோத்தகிரி, நீலகிரி, 7. எஸ்.நாசர், தாரமங்கலம், ஓமலூர், சேலம், 8. கே.சுப்ரமணியன், பொன்மேடு, சத்தியமங்கலம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x