Last Updated : 03 Feb, 2016 08:27 AM

 

Published : 03 Feb 2016 08:27 AM
Last Updated : 03 Feb 2016 08:27 AM

மருத்துவப் படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்படும்- கோவையில் மோடி தகவல்

கோவை வரதராஜபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை திறப்பு விழா மற்றும் மாநில அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, மாநில அரசின் நிர்வாகிகளிடம் அதை ஒப்படைத்தார்.

நிகழ்ச்சிக்கு, தமிழக ஆளுநர் கே.ரோசய்யா முன்னிலை வகித்தார். மத்திய இணை அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் பி.மோகன், எஸ்.பி.வேலுமணி, சி.விஜய பாஸ்கர், கோவை எம்பி நாகராஜன், இஎஸ்ஐசி தலைமை இயக்குநர் தீபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

மாநில மற்றும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களை அதிகப்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 10 ஆயிரம் எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்கப்படும். 23 மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 1,700 மருத்துவப் படிப்புக்கான இடங்களை அதிகப்படுத்த அனுமதிக்கப் பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை தரம் உயர்த்தி, தலா 345 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கூடுதலாக்கப்படும்.

எய்ம்ஸ்க்கு இணையான மருத்துவக் கல்லூரிகளை நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ளன. தொழிலாளர் நலச் சட்டங்களில் அம்பேத்கரின் பங்களிப்பை பலரும் அறிந்திருக்கவில்லை. அதை அனைவரும் அறியும் வகையில் அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் புத்தகம் ஒன்றை வெளியிட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x