Published : 22 Jun 2016 08:48 AM
Last Updated : 22 Jun 2016 08:48 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு தூர் வாரும் பணியை உடனடியாக தொடங்க வேண்டுமென்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
காவிரி டெல்டா பகுதிகளில் சுமார் 30 ஆயிரம் கி.மீ தொலைவுக்கு ஆறு கள், வாய்க்கால்கள், வடிகால்கள் உள்ளன. பல ஆண்டுகளாக மண் மேடிட்டு, தூர்ந்துபோயுள்ள வாய்க்கால்கள் மற்றும் வடிகால் களை தூர் வாரும் பணியை பொதுப் பணித் துறையினர் ஆண்டுதோறும் மேற்கொள்வர்.
பிப்ரவரி மாதம் வாய்க்கால்களில் தண்ணீர் நின்ற பிறகு, எந்தெந்த வாய்க்கால்களை தூர் வார வேண் டும் எனக் கணக்கெடுத்து, அதற் கான திட்ட மதிப்பீட்டை பொதுப் பணித் துறையினர் அரசுக்கு அனுப்பி வைப்பர்.
பின்னர், பட்ஜெட் கூட்டத் தொட ரிலோ அல்லது தனி அறிவிப் பாகவோ, தூர் வாரும் பணிக்கு சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்து தமிழக முதல்வர் அறிவிப்பது வழக் கம். தூர் வாரும் பணி, அடுத்த சாகுபடிக்கு முன்பாகவே முடிந்து விடும்.
இதன்படி, கடந்த பிப்ரவரி மாதம் சாகுபடி முடிந்ததும், மார்ச் மாதத்தில் பொதுப்பணித் துறையினர் திட்ட மதிப்பீடுகளை தயாரித்து, அரசுக்கு அனுப்பியிருக்க வேண்டும். ஆனால், சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்ததா லும், அதிகாரிகளை தேர்தல் பணியில் ஈடுபடுத்தியதாலும் திட்ட மதிப்பீடுகளை தயாரிக்கவில்லை.
தமிழகத்தில் அதிமுக ஆட்சி பொறுப்பேற்று ஒரு மாதமாகிவிட்டது. தற்போது, சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. எனினும், இதுவரை பொதுப்பணித் துறை சார்பில், தூர் வாரும் பணிக்கான திட்ட மதிப்பீடுகள் தயாரித்து, தமிழக அரசுக்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயி கள் சங்க மாநிலச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி கூறும்போது, “தூர் வாரும் பணிக்காக ஒதுக்கப்படும் சிறப்பு நிதியில் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க, ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பே பணிகளைத் தொடங்குவது அவசியம்” என்றார்.
பொதுப்பணித்துறை நீர்ப் பாசன பொறியாளர் கூறும்போது, “பராமரிப்புப் பணிக்காக தமிழக அரசு ஒதுக்கிய நிதியில், சில கட்டுமானப் பணிகள் நடைபெறுகின் றன. தூர் வாரும் பணி தொடர்பாக இதுவரை எவ்வித தகவலும் வர வில்லை. திட்ட மதிப்பீடுகளும் தயாரிக்கப்படவில்லை.
உடனடியாக உத்தரவு வந்தாலும், திட்ட மதிப்பீடு தயாரித்து, அதற்கு ஒப்பு தல் பெற்று, பணியைத் தொடங்க கால அவகாசம் போதாது. ஆகஸ்ட் மாதம் பருவ மழை தொடங்கிவிடும். காவிரியிலும் தண்ணீர் வந்துவிடும். எனவே, இந்த ஆண்டு தூர் வாரும் பணி நடைபெற வாய்ப்புகள் மிகவும் குறைவு” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT