Published : 31 Mar 2014 12:42 PM
Last Updated : 31 Mar 2014 12:42 PM
காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த தலைமறைவு ரவுடிகள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரகாஷ், மகேந்திரன், அம்பத்தூரை சேர்ந்த வினோத் குமார், கொரட்டூரை சேர்ந்த சங்கர், வியாசர்பாடியை சேர்ந்த தங்கமணி ஆகியோர் ரவுடி ஆற்காடு சுரேசின் நெருங்கிய கூட்டாளிகள். இவர்கள் மீது ரவுடி சின்னா மற்றும் அவரது வழக்கறிஞரை பூந்தமல்லி நீதிமன்ற வளாகத் தில் வைத்து கொலை செய்த வழக்கு உட்பட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர்கள் ஏற்கெனவே குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் 5 பேரும் தலை மறைவாகி விட்டனர். ரவுடி கள் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் கள் நடராஜன், ராஜா ராம், உதவி ஆய்வாளர்கள் ராஜசேகர், கமல்மோகன் ஆகியோர் தலை மையிலான காவல் துறையினர் 5 பேரையும் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT