Last Updated : 01 May, 2014 09:04 AM

 

Published : 01 May 2014 09:04 AM
Last Updated : 01 May 2014 09:04 AM

தேர்தல் பாதுகாப்பு குறைபாடால் பறிபோன உயிர்?: கலங்கித் தவிக்கும் அரக்கோணம் ஆசிரியையின் குடும்பம்

ஆசிரியை பூங்கொடி. ஜூன் 4-ம் தேதி நடக்கும் மகள் சரண்யா வின் நிச்சயதார்த்த வேலைகளை தொடங்க திட்டமிருந்த நிலையில் ஏப்.24-ம் தேதி தேர்தல் பணி அழைத்தது. பணி முடிந்து மாலையில் வீடு திரும்புவார் என காத்திருந்த அவரது கணவர் அன்பழகனுக்கு பூங்கொடி வருவதற்கு பதிலாக அவரது இறப்பு செய்திதான் வந்தது. உருக் குலைந்து போனது ஒட்டுமொத்த குடும்பமும்.

இது ஏதோ பணிக்கு சென்ற ஒரு பெண் ரயில் மோதி இறந்துவிட்டார் என்ற வெறும் விபத்து செய்தி அல்ல. இதன் பின்னணியில் தேர்தல் பணிகளின் குறைபாடுகள் குறித்த அம்சங்கள் பற்றிய விவாதங்கள் கிளம்பியுள்ளன. மனைவியை இழந்த துயரத்திலிருந்த மீண்டு வராத அன்பழகனை ‘தி இந்து’ சார்பில் தொடர்பு கொண்டோம்.

அவர் கூறுகையில், ‘தேர்தல் கமிஷன் எனது மனைவிக்கு மட்டு மல்லாமல் தேர்தல் பணியிலிருந்த எல்லா பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க தவறிவிட்டது என குமுறினார்.

மேலும் “எனது மனைவி பூங்கொடி 1997-ம் ஆண்டு முதல் தேர்தல் பணிக்கு சென்று வருகிறார். எப்போதும் ஆசிரியர்களின் வசிப் பிடங்களுக்கு அருகிலேயே வாக்குச்சாவடிகள் இருக்கும். கடந்த இரண்டு தேர்தல்களாக தான் நம்பகத்தன்மையை காரணம் காட்டி ஒரு பகுதியில் வசிக்கும் ஆசிரியர்களை வேறு பகுதிகளுக்கு நியமிக்கின்றனர். இதனால் பாதுகாப்பு குறைபாடு, போக்குவரத்து வசதியின்மை என பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது” என்றார்.

மனைவி இறந்து பற்றி நம்மிடம் கூறிய அவர், “நாங்கள் வசிக்கும் பகுதி அரக்கோணம். தேர்தல் பயிற்சி முகாம் அரக்கோணத்திற்கு அருகிலேயே நடந்தது.

இந்நிலையில் வாணியம்பாடி அருகில் உள்ள தும்பேரி ஊராட்சி பள்ளியில் அவருக்கு பணி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான ஆணையை பெற்றுக் கொள்ள ஏப்.23-ம் தேதி காலை 9 மணிக்கு வருமாறும் அழைப்பு வந்தது. இதன்பேரில் அதிகாலை யிலேயே புறப்பட்டு சென்ற அவர் ஆணையை பெற்றுக்கொண்டார். மறுநாள் தேர்தல் நாளில் காலை 6 மணிக்கே இருக்க வேண்டும் என்பதால் அங்கேயே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பள்ளியில் இரவில் தங்கிவிட்டார்.

மறுநாள் தேர்தல் முடிந்து பூங்கொடியிடம் போனில் பேசிய போது மணி இரவு 9.30. அதுவரை வாக்குப்பெட்டிகளை எடுப்பதற்கு அதிகாரிகள் வரவில்லை என்று சொன்னார். பின்னர் 10.30 மணிக்கு பணியில் இருந்த ஆசிரியர் கள் லிப்ட் கேட்டு ஒருவழியாக வாணியம்பாடி ரயில் நிலையத் துக்கு வந்துள்ளனர்.

அவர்கள் இரவு 12.30 மணி வரை ரயில் நிலையத்தில் இருந்தனர். அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அவர் 3-வது நடைமேடைக்குச் சென்றுவிட்டு திரும்புகையில் எதிரில் வந்த காவேரி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உடல் சிதைந்து மனைவி பலியானார்” என்று தழுதழுக்க அன்பழகன் கூறினார்.

“தேர்தல் ஆணையம் முறையான போக்குவரத்து வசதி யும் பாதுகாப்பும் வழங்கி இருந் தால் என் மனைவி இன்று என்னுடன் இருந்திருப்பாள். இந்த விவகாரத் தில் தேர்தல் ஆணையம் பதில் சொல்லியாக வேண்டும்” என்றார் அவர்.

போக்குவரத்து வசதி குறைவு

தேர்தல் பணியிலிருந்த பெரும் பாலான ஆசிரியைகள் தங்களுக்கு போதுமான போக்கு வரத்து வசதி செய்து தரப்பட வில்லை. பெரும்பாலானவர்கள் போக்கு வரத்துக்கு தங்கள் சொந்த காசை செலவழித்தனர் என்றனர். இந்த குற்றச்சாட்டை வேலூர் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ மறுத்தார். “வேலூர் மாவட் டத்தில் 159 பேருந்துகளும் 20 சிறு பேருந்துகளும் அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்பட்டன” என்றார்.

தேர்தல் பணியில் ஈடுபடுபவர் களின் பாதுகாப்பை உறுதி செய்யாத தால் இன்று ஒரு குடும்பமே உருக் குலைந்து போயிருக்கிறது. இனி வருங்காலங்களில் இன்னொருவ ருக்கு பூங்கொடி நிலை ஏற்படக் கூடாது என்பதுதான் தேர்தல் பணி செய்யும் ஆசிரியர்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x