Published : 09 Jun 2016 08:09 AM
Last Updated : 09 Jun 2016 08:09 AM
மக்கள் நலக் கூட்டணி நீடிக்குமா என்பது தொடர்பாக விடுதலை சிறுத் தைகள் கட்சித் தலைவர் திருமா வளவன் கருத்து கூறியுள்ளார்.
தேமுதிக ம.ந.கூட்டணி- தமாகா அணி நடந்து முடிந்த சட்டப்பேர வைத் தேர்தலில் 234 இடங்களி லும் தோல்வியை தழுவியது. தேமுதிகவின் தேர்தல் ஆணைய அங்கீகாரமும் பறிபோயுள் ளது. இதேபோல காட்டுமன்னார்கோவி லில் போட்டியிட்ட விசிக தலைவர் திருமாவளவன் 87 வாக்கு களில் தோல்வியை தழுவினார்.
மக்கள் நலக் கூட்டணியில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநி லச் செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தேர்தலில் போட்டி யிடவில்லை.
இந்த சூழலில், தேர்தல் தோல்வி குறித்து தேமுதிக மற்றும் தமாகா தரப்பில் தனித்தனியே ஆலோ சனைக் கூட்டங்கள் நடத்தப்பட்ட போது, ‘ம.ந.கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்ததுதான் தோல் விக்கு காரணம். எனவே, அந்தக் கூட்டணியிலிருந்து விலக வேண் டும்’ என்று கட்சி நிர்வாகிகள் வலி யுறுத்தியதாகவும், அதன் காரணத் தால் ம.ந.கூட்டணியில் இருந்து விலகும் முடிவில் தேமுதிகவும், தமாகாவும் உள்ளதாகவும் கூறப் படுகிறது.
ஆனால், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேமுதிக ம.ந.கூட்டணி- தமாகா அணி மேலும் வலுப்பெறும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதற்கிடையே, உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அவசியமில்லை என்று திருமாவளவன் கூறியதன்பேரில், விசிக ம.ந.கூட்டணியில் இருந்து வெளியேறும் என்ற தகவலும் பரவி வருகிறது.
இந்நிலையில், விசிகவின் தற் போதைய நிலைப்பாடு குறித்து அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ‘தி இந்து’ விடம் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அவசியமில்லை என்று நான் கூற வில்லை. உள்ளாட்சித் தேர்தலின் போது கூட்டணி என்ற விஷயத்தை திமுகவும், அதிமுகவும் இதுவரை ஒரு பொருட்டாக கருதியதில்லை.
சட்டப்பேரவைத் தேர்தலின் சூழல் வேறு உள்ளாட்சித் தேர்தலின் சூழல் வேறு. இரண்டையும் ஒன் றோடு ஒன்றாக பொருத்திப் பார்க்க முடியாது. மேலும், ம.ந.கூட்டணி யோடு தேமுதிகவும், தமாகாவும் தொகுதி உடன்பாடு மட்டுமே வைத் துக் கொண்டன. எது எப்படியானா லும், கூட்டணியில் இருப்பதும் வெளியேறுவது அவரவர் உரிமை மற்றும் விருப்பம் சார்ந்த விஷயம். ஆனால், விடுதலை சிறுத்தைகளை பொறுத்தவரை, மக்கள் நலக் கூட் டணி உட்பட 6 கட்சிகளை கொண்ட இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் கருத்து. உள்ளாட்சித் தேர்தலை எந்த வகையில் சந்திப்பது என்பது குறித்து ம.ந.கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் ஆலோசித்து முடிவு செய்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT