Published : 29 Mar 2014 11:03 AM
Last Updated : 29 Mar 2014 11:03 AM
திருவள்ளூர் அரசு மருத்துவ மனையில் இறந்த பச்சிளம் குழந்தையை நாய் கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் அரசு மருத்துவ மனை வளாகத்தில் உள்ள முள்புதரில், வெள்ளிக்கிழமை மாலை, நாய்கள் கூட்டமாக சேர்ந்து சண்டை போட்டுக் கொண்டிருந்தன.
மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளின் உறவினர்கள் அருகில் சென்று பார்த்த போது, அங்கு இறந்த பச்சிளம் குழந் தையை நாய்கள் கடித்துக் குதறிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே, அவர்கள் இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து, காவல் துறைக்கு புகார் அளித்தனர்.
போலீஸார் சம்பவ இடத் துக்கு விரைந்து வந்து இறந்து கிடந்த குழந்தையின் உடலைக் கைப்பற்றி சவக் கிடங்கிற்கு அனுப்பி வைத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில், பெரியபாளையம் அடுத்த திருக்கண்டலம் கிராமத்தைச் சேர்ந்த ஜோதி என்ற பெண் கடந்த 25-ம் தேதி பிரசவத்துக்காக மருத்துவமனையில் சேர்ந்துள்ளார்.
அவருக்கு வெள்ளிக்கிழமை நள்ளிரவு குறைபிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்து இரண்டு மணி நேரத்தில் இறந்து விட்டது. சனிக்கிழமை காலை குழந்தையை எடுத்துச் செல்லு மாறு அவரிடம் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர் மருத்துவமனை பின்புறத் தில் குழந்தையை வீசிவிட்டு போயிருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், அந்த பெண் கொடுத்த முகவரியும் போலி என விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
பிரசவத்துக்கு வந்த பெண் கொடுத்த வீட்டு முகவரியும் போலி என விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT