Published : 24 Sep 2016 03:41 PM
Last Updated : 24 Sep 2016 03:41 PM
டெல்டா மாவட்டங்களின் சம்பா சாகுபடிக்காக, திருச்சி கல்லணையில் இருந்து இன்று (சனிக்கிழமை) காலை 11,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.
காவிரி நீர் நேற்று காலை முக்கொம்பை அடைந்துள்ளது. நேற்று நள்ளிரவு கல்லணைக்கு வந்த நீர் சேமிக்கப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு தமிழக அமைச்சர்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளர்மதி, காமராஜ், ஓ.எஸ். மணியன் மற்றும் துரைக்கண்ணன் முன்னிலையில் கல்லணையில் இருந்து 11,200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இத்தோடு வெண்ணாற்றில் இருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
கல்லணை நீரால் தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 5 டெல்டா மாவட்டங்கள் பயனடையும். கல்லணையில் இருந்து சீறிப்பாய்ந்த தண்ணீரை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.
காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உழவு உள்ளிட்ட விவசாயப் பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT