Published : 27 Jun 2016 08:01 AM
Last Updated : 27 Jun 2016 08:01 AM
சென்னையில் வனத்துறை சார்பில் இந்த ஆண்டு 8 ஆயிரத்து 646 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன. கடந்த டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இந்த ஆண்டு கடலில் விடப்படும் ஆமைக் குஞ்சுகளின் எண்ணிக்கை குறைந்தது.
உலகில் 60 சதவீத மக்கள் மீன்களை பயன்படுத்துபவர்களாக உள்ளனர். இதில் கடல் மீன்களுக்கு ஜெல்லி மீன்கள் எதிரியாக உள்ளன. இம்மீன்கள் மற்ற மீன்களின் குஞ்சுகளை உணவாக உண்டு மீன் வளத்தை அழித்து வருகிறது. இந்த ஜெல்லி மீன்களுக்கு முக்கிய எதிரியாக இருப்பவை கடல் ஆமைகள். இந்த ஆமைகள் ஜெல்லி மீன்களை உணவாக உண்டு வளர்கின் றன. அதனால் கடல் ஆமைகள் மீனவர் களின் நண்பனாக திகழ்ந்து வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரை தமிழக கடலோரப் பகுதிகளில் ஆமைகள் முட்டையிட்டு கடலுக்கு செல்கின்றன. இவற்றுக்கு முட்டைகளை அடைகாத்து, குஞ்சு பொறிக்கத் தெரியாது.
இந்த முட்டைகளை நாய்களும், பறவைகளும் சிதைப்பதால் ஆமை களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படு கிறது. இதை கருத்தில் கொண்டு கடல் ஆமை இனத்தை பாதுகாக்கும் விதமாக, கடந்த 2013-ம் ஆண்டு முதல் வனத்துறை சார்பில், தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் ஆமை முட்டைகள் சேகரிக்கப்படுகின்றன. பின்னர் பெசன்ட் நகர் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள குஞ்சுகள் பொறிப்பகத்தில் அவை அடைகாக் கப்பட்டு ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்படுகின்றன. இந்த ஆண்டு 8 ஆயிரத்து 646 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த டிசம்பரில் ஆமை கள் முட்டையிட வரவில்லை. ஜனவரி யில்தான் முட்டையிட வந்தன. இந்த ஆண்டு மொத்தம் 8 ஆயிரத்து 646 ஆமைக் குஞ்சுகளை கடலில் விட்டோம். கடந்த ஆண்டு 11 ஆயிரத்து 521 ஆமைக் குஞ்சுகள் கடலில் விடப்பட்டன” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT