Published : 17 Feb 2017 11:26 AM
Last Updated : 17 Feb 2017 11:26 AM

110 பேரூராட்சிகளை நகராட்சிகளாக்க பரிந்துரை: தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக தகவல்

தமிழகத்தில் 110 பேரூராட்சிகளை நகராட்சிகளாக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் 12 சிறப்பு நிலை பேரூராட்சிகள், 222 தேர்வு நிலை பேரூராட்சிகள், 214 முதல்நிலை பேரூராட்சிகள், 80 இரண்டாம் நிலை பேரூராட்சிகள் உள்ளன. இந்த பேரூராட்சிகள் 17 மண்டலங்களாகப் பிரித்து நிர்வாகங்கள் நடக்கின்றன. கடந்த காலங்களில் 2004-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை 69 பேரூராட்சிகள், நகராட்சிகளாக மாற்றப்பட்டன.

அதற்குப் பிறகு தற்போதுவரை 40 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டன. இதுதவிர சில நகராட்சிகள் மாநகராட்சியாகும்போது அவற்றுடன் சுற்றியிருக்கிற 10-க்கும் மேற்பட்ட பேரூராட்சிகள் இணைக்கப்பட்டன. தற்போது மேலும் 110 பேரூராட்சிகள், விரைவில் மூன்றாம் நிலை நகராட் சிகளாக மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி செயல் அலுவலர் ஒருவர் கூறியதாவது:

குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு முறை மக்கள்தொகை, வருவாய் அடிப்படையில் உள்ளாட்சி அமைப் புகள் தரம் உயர்த்தப்படும். அதனடிப்படையில் சமீப காலத் துக்கு முன் திண்டுக்கல், தஞ்சாவூர் நகராட்சிகள் மாநகராட்சிகளாக்கப்பட்டன. தற்போது, 110 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்ற பேரூரா ட்சிகள் இயக்குநர்களிடம் இருந்து பரிந்துரை பட்டியல் பெற்று, நகராட்சிகள் இயக்குநர் அரசு ஒப்புதலுக்காக அனுப்பி உள்ளார். இதற்கு அரசு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் விரைவில் 110 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற உள்ளது.

மக்களுக்கு சேவையை எளிமைப்படுத்தவும், துரிதப்படுத்தவும், அதிகளவு நகர்ப்புற திட்டங்களை. பேரூராட் சிகளில் நடைமுறைப்படுத்தவுமே இந்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், ஏற்கெனவே மாநகராட் சிகளாக்கப்பட்ட நகராட்சிகள், போதிய சாலை, தெருவிளக்கு, பாதாள சாக்கடை, குடிநீர் வசதி களை மேம்படுத்தாமலே தரம் உயர்த்தப்பட்டுளளது. அரசு வரியை உயர்த்தி வருவாயை அதிகரிக்கவே, இதுபோல், பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் மாற்றப்படுகிறது.

பெரும்பா லான பேரூராட்சிகள் இன்னும் வளர்ச்சியடையாத கிராமங் களாகவே இருக்கின்றன. இந்த பேரூராட்சிகளில் குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி களை நகர்ப்புறங்களுக்கு இணையாக தரம் உயர்த்திவிட்டு அதன்பிறகு நகராட்சிகளாக தரம் உயர்த்தினால் நலமாக இருக்கும். பேரூராட்சிகள் தொடர்ந்து நகரா ட்சிகளாக்கப்படுகின்றன. ஆனால், கிராம பஞ்சாயத்துகள் பேரூரா ட்சிகளாக்கப்படுவதில்லை.

110 பேரூராட்சிகளை நகராட்சிகளாக தரம் உயர்த்தினால் அங்கு பணிபுரியும் செயல் அலுவலர்களுக்கு எந்தவிதமான மாற்றுப்பணிகள் ஒதுக்கப்படும், அவர்கள் நிலை என்ன என்பதும் தெளிவில்லாமல் உள்ளது. இவ் வாறு அவர் தெரிவித்தார்.

பிப். 27-ல் ஆலோசனைக் கூட்டம்

பேரூராட்சி செயல் அலுவலர் மேலும் கூறியது: பேரூராட்சிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் நகராட்சிகளாக மாற்றினால் கட்டிட அனுமதி, வரி உயர்வு உள்ளிட்டவற்றால் மக்கள் சிரமத்தை சந்திக்க நேரிடும்.

பேரூராட்சியில் செயல் அலுவலர், துப்புரவு ஆய்வாளர், தலைமை எழுத்தர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர் ஆகியோர் 5 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். நகராட்சியாக மாறும்போது ஆணையர், நகர்நல அலுவலர் ஆகியோர் அரசு பணியாளராக இருப்பார்கள் என்றும், மற்றவர்கள் அரசு நிலையாக்கப்படாத பணியாளராக மாற்றப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ஒரே நேரத்தில் இவ்வளவு பேரூராட்சிகளை நகராட்சிகளாக்கும்போது, அந்த பேரூராட்சிகளில் பணிபுரியும் ஊழியர்கள், அதிகாரிகள் அவர்கள் சொந்த மாவட்டங்கள் மற்றும் நீண்ட காலம் பணிபுரிந்த இடங்களில் பணிபுரிய முடியாத சூழல் ஏற்படும். ஓய்வூதியம், சலுகைகள் நகராட்சியாக மாறும்போது தாமதமாக கிடைக்க வாய்ப்புள்ளது.

அதனால், வரும் 27-ம் தேதி பேரூராட்சி செயல் அலுவலர்கள் சங்க கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அன்று, இந்த பிரச்சினைகள் பற்றி ஆலோசிக்க உள்ளோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x