Published : 28 Mar 2014 12:00 AM
Last Updated : 28 Mar 2014 12:00 AM
தனது தாயார் தயாளு அம்மாளை சந்தித்துப் பேசிய மு.க. அழகிரி, வியாழக்கிழமை கனிமொழியைச் சந்தித்துள்ளார். இதன் மூலம் சமாதானப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியுள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அழகிரி புதன்கிழமை கோபால புரம் வீட்டுக்குச் சென்று தயாளு அம்மாளைச் சந்தித்தார். அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் தனது வழக்கமான கோபத்தையும் குற்றச்சாட்டுகளையும் தயாளு அம்மாளிடம் அழகிரி கொட்டியுள் ளார். அப்போது தயாளு அம்மாள் கண் கலங்கிப்போய், சில அறிவுரை களை கூறினாராம். அம்மா அழுத தைத் பார்த்து அழகிரியும் கண் கலங்கியதாகச் சொல்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.
இதையடுத்து, வியாழக்கிழமை காலை 8 மணிக்கு சி.ஐ.டி. காலனி யில் உள்ள கனிமொழியின் வீட்டுக் குச் சென்றார் அழகிரி. அங்கு 9.15 மணி வரை இருவரும் மனம் விட்டுப் பேசினர். கருணாநிதிக்கு அழகிரி சில கோரிக்கைகளை கனிமொழி வாயிலாக தெரிவித்த தாகக் கூறப்படுகிறது. அதற்கு அவர், ’கட்சிக்கு எதிராக தொடர்ந்து நீங்கள் பேசிக்கொண்டே இருந்த தால் இந்த கோரிக்கைகளை அப்பா விடம் நான் எப்படி எடுத்துச் செல்ல முடியும்?’ என்று கேட்டிருக்கிறார்.
மேலும், கனிமொழி தரப்பில், “திமுக-வுக்கு எதிரான சக்திகள் இன்று உங்களுக்கு ஆதரவு தெரி வித்தாலும் நாளை கைவிட்டுவிடு வர். வீடு தேடி வந்து சந்திக்கிறார் களே என்று மயங்கிவிட வேண்டாம். இப்போது எழுந்திருக்கும் பிரச் சினைகள் எல்லாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால், திமுக-வுக்கு எதிரான சக்திகளுடன் கைகோர்த்தால் கட்சியைவிட உங்க ளுக்குதான் பாதிப்புகள் அதிகம்.
உங்கள் எதிர்ப்பால் திமுக-வின் பாரம்பரிய ஓட்டுகள் பாதிக்கப் படாது. ஆனால், அதிமுக எதிர்ப்பு ஓட்டுகள் திமுக-வுக்கு வராமல் அவை பாஜக அணிக்கு சென்று விடும். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மதுரையில் உங் களுக்கு பாதுகாப்பாக இருந்தார் கள். ஆனால், அவர்களே இன்று உங்களை விட்டு அணி மாறிவிட்ட தால் உங்களுக்கு அங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. எனவே, திமுக மட்டுமே உங்களுக்கு நிரந்தரப் பாதுகாப்பு” என்றும் கூறியிருக்கிறார்கள்.
இதுமட்டுமில்லாமல், டாக்டர் கிருஷ்ணசாமிக்கு எதிராக அழகிரி பேசியதற்கும் வருத்தம் தெரிவித்த கனிமொழி, ‘என் மூலமாக கூட்ட ணிக்கு வந்தவர் அவர். அவர் ஓட்டு போட்டு நான் ராஜ்ய சபா உறுப்பினர் ஆனேன். அவர் தோற்பார் என்று எப்படி சொல்லலாம்?’ என்று ஆதங்கப்பட்டாராம். இதையெல் லாம் மெளனமாகக் கேட்டுக் கொண்ட அழகிரி ஓரளவு சமாதா னம் ஆனதாகவே சொல்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT