Published : 20 Jun 2015 08:18 AM
Last Updated : 20 Jun 2015 08:18 AM

ராகுல்காந்தி பிறந்தநாள்: எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் - கருணாநிதி வாழ்த்து

ஜூன் 19-ம் தேதி (நேற்று) பிறந்த நாள் கொண்டாடிய காங்கிரஸ் அகில இந்திய துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு ‘எல்லா முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும்’ என திமுக தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்திக்கு நேற்று அனுப்பிய ஃபேக்ஸ் செய்தி:

இன்று (ஜூன் 19) பிறந்தநாள் கொண்டாடும் தங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நீண்ட காலம் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு குறிப்பாக அடித் தட்டு, ஏழை மக்களுக்கு பணி யாற்றவும் உங்களது எல்லா முயற்சிகளும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன். உங்கள் உடல் நலத்தை கவனித்துக் கொள்ளுங் கள் என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x