Published : 13 Jan 2017 11:46 AM
Last Updated : 13 Jan 2017 11:46 AM
மதுரை மாவட்டம் அலங் காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும் வாடிவாசல்களை போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்காமல் தடுக்க காளைகள் வளர்க்கப்படும் கிராமங்களை கண்காணிக்க பல்துறை அதி காரிகள் கொண்ட சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தடையால் தமிழ கத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. வரும் பொங்கல் பண்டிகைக்கு ஜல்லிக்கட்டு நடக்கும் என்ற நம்பிக்கையில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்கள் நடந்தன. கடந்த 4 நாட்களாக மாணவர்கள் அதிகளவில் போராட்டத்தில் பங்கேற்றனர். இந்த நிலையில், பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க வாய்ப் பில்லை என உச்ச நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதனால் ஜல்லிக்கட்டு நடக்கும் வாய்ப்பு மங்கிப்போனதால், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
உச்ச நீதிமன்ற உத்தரவை யடுத்து போலீஸார் பாது காப்பு நடவடிக்கைகளை தீவிரப்ப டுத்தியுள்ளனர். நேற்று மதியம் முதல் அலங்காநல்லூர், பால மேட்டில் ஜல்லிக்கட்டு காளைகள் வெளியேறும் வாடிவாசல்களில் தடுப்புகளை அமைத்து போலீஸார் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர். இப்பகுதியில் யாரும் நுழையாமல் தடுக்க கூடுதல் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர். வருவாய்த்துறையில் வட்டாட்சியர் நிலையில் வாடிவாசல் முன்பு கண்காணிப்பில் ஈடுபடுமாறு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியது: மறு உத்தரவு வரும்வரை ஜல்லிக்கட்டு நடக்கும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் சுற்றுப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அரசு உத்தரவிட்டுள்ளது.
எக்காரணம் கொண்டும் ஜல்லிக்கட்டு நடந்து விடக் கூடாது. மீறி நடந்தால் உடனே உயர் அலுவலர்களின் கவனத் துக்கு கொண்டுவந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
காளைகள் வளர்க்கப்படும் கிராம ங்களை முழுமையாக கண்காணிக்க வேண்டும். கிராம உதவியாளர், நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையினர், காவல்துறையினர் இணைந்து சிறப்பு குழு அமைக் கப்பட்டுள்ளது. இக்குழு 24 மணி நேரமும் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை உள்ளிட்ட ஜல்லிக்கட்டு நடக்கும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் இப்பணியை மேற்கொள்ளவும் அரசு உத்தரவி ட்டுள்ளது. மறு உத்தரவு வரும்வரை இப்பணியில் தொட ரவும், எத்தகைய அசாதாரண சூழலையையும் சமாளிக்கவும் தயா ராக இருக்கும்படி அறிவுறுத்த ப்பட்டுள்ளது என்றார்.
இதுபற்றி போலீஸார் கூறு கையில், ஜல்லிக்கட்டுக்கு காளைகளை அனுப்ப மாட்டோம் என உரிமையாளர்களை அழை த்து உறுதிமொழி வாங்கத் திட்டமிட்டுள்ளோம். பொங்கலை யொட்டி காளைகளை அலங்கரித்து கோயிலுக்கு அழைத்து செல்லவும், கிராமத்து தெருக்களில் ஓடவிடவும் தடை இல்லை. அதேநேரம், ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிக்கு கொண்டுசெல்ல அனுமதி இல்லை. அலங்காநல்லூர் பகுதியிலுள்ள 235 காளைகள் எங்கள் கண்காணிப்பில் உள்ளன. அரசின் ஆதரவு இல்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த மாட்டோம் என விழா கமிட்டியினர் உறுதியளித்துள்ளனர். தனித்தனியாக காளைகளை அவிழ்த்துவிடும் வழக்கம் இப்ப குதியில் இல்லை.
இதனால் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடக்க வாய்ப்பு இல்லை. சில கிராமங்களில் ஒன்றிரண்டு காளைகளை வைத்து ஜல்லிக்கட்டுபோல் நடத்திவி டக்கடாது என்பதற்காக தீவிரமாக கண்காணிக்கிறோம் என்றனர்.
அரசின் நடவடிக்கையால் ஜல்லிக்கட்டு கிராமங்களில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT