Published : 05 Jan 2017 09:38 AM
Last Updated : 05 Jan 2017 09:38 AM
வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயம், வீடுகள் சேதம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த இழப்பீடு மிகவும் குறைவாக இருந்ததால், அவை மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பயிர் சேதங்களுக்கான இழப்பீடு உயர்த்தப்படவில்லை என்று வனத்துறை விளக்கமளித்துள்ளது.
தமிழக அரசு, வன விலங்குகளால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் சேதங்களுக்கான இழப்பீட்டு தொகையை உயர்த்தி அண்மையில் அரசாணை பிறப்பித்துள்ளது. அதில், வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு இழப்பீடாக வழங்கி வந்த ரூ.3 லட்சத்தை ரூ.4 லட்சமாகவும், படுகாயமடைந்தோருக்கு ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.59 ஆயிரத்து 100 ஆகவும் உயர்த்தியுள்ளது. மேலும் முழுவதும் சேதமடைந்த கான்கிரீட் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வந்த இழப்பீட்டு தொகை ரூ.35 ஆயிரத்திலிருந்து ரூ.95 ஆயிரத்து 100 ஆக உயர்த்தியுள்ளது. ஆனால் பயிர்களுக்கான இழப்பீடு உயர்த்தப்படவில்லை.
விவசாயிகள் ஏமாற்றம்
தமிழகத்தில் கோவை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் யானைகளாலும், பிற மாவட்டங் களில் காட்டுப் பன்றி போன்றவற் றாலும், நெல் பயிர்கள், கரும்பு மற்றும் வாழை தோட்டங்கள், வேர்கடலை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் சேதமடைகின்றன. இதற்கான இழப் பீட்டை, பாதிக்கப்பட்ட விவசாயி களுக்கு வனத்துறை வழங்கி வரு கிறது. தற்போது, சேதமடைந்த பயிர் களுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரமும், தென்னை மரத்துக்கு ரூ.500-ம் இழப்பீடாக வழங்கப்படுகிறது. இது கடந்த 2011-ல் நிர்ணயிக்கப்பட்டது. தற்போது பல்வேறு இனங்களுக்கான இழப்பீட்டு தொகை உயர்ந்த நிலையில், பயிர் சேதங்களுக்கான இழப்பீடு உயர்த்தப்படாதது விவசாயிகள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறிய தாவது:
விலங்குகளால் பயிர்கள் சேதப் படுத்தப்பட்டால், உற்பத்தி செலவு, பயிர் முதிர்ந்தால் கிடைக்கும் லாபம் ஆகியவற்றை கணக்கிட்டு இழப் பீட்டை நிர்ணயிக்க வேண்டும். இது பயிருக்கு பயிர் மாறுபடும். நெல் பயிருக்கு ரூ.25 ஆயிரம் வழங்கினால் ஏற்கலாம். ஆனால் கரும்புக்கு உள்ளிட்ட பயிர்களுக்கும் அதே இழப்பீடு என்பதை ஏற்க முடியாது. எனவே பயிர் சேதங்களுக்கான இழப்பீட்டையும் அரசு பரிசீலித்து உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக வனத்துறை உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, வருவாய்த்துறை கடந்த 2015-ல் மாநில பேரிடர் நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கு வது தொடர்பான உத்தரவில், எந் தெந்த இனங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங்கலாம் என நிர்ணயித் துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில், வன விலங்குகளால் ஏற்படும் உயி ரிழப்பு, படுகாயம், வீடுகள் சேதம் போன்றவற்றுக்கு கடந்த 2011-ல் நிர் ணயிக்கப்பட்டிருந்த இழப்பீட்டுத் தொகை மிகவும் குறைவாக இருந் தது. அதை மட்டும் உயர்த்தியிருக் கிறோம். வருவாய்த்துறையானது பயிர் சேதங்களுக்கான இழப்பீடாக ஏக்கருக்கு ரூ.5 ஆயிரத்து 465 தான் நிர்ணயித்துள்ளது. ஆனால் அரசு தற்போது ரூ.25 ஆயிரம் வழங்கி வருகிறது. அதனால் பயிர் சேதங்களுக்கான இழப்பீடு உயர்த்தப்படவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT