Published : 26 May 2017 10:01 AM
Last Updated : 26 May 2017 10:01 AM

 25 ஏக்கரில் ரூ.5.50 கோடி செலவில் மல்லிகை மகத்துவ மையம்: மதுரை மல்லிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு

மதுரையில் ரூ.5.50 கோடியில் மல் லிகை மகத்துவ மையம் அமைப்ப தற்கு தேசிய தோட்டக்கலை இயக் கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதனால், மதுரை குண்டு மல்லிக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு நிலத்தின் தன்மை, சுற்றுச்சூழல், தண்ணீர், மண் வளம், வெப்பம், காற்றுக்கு தகுந்தபடி அங்கு விளையக்கூடிய விளை பொருட்கள் ருசி, மணத்தை இயற் கையாகவே பெற்றிருக்கும். இது போன்று ஒவ்வொரு ஊரிலும் உற்பத்தியாகும் பிரசித்தி பெற்ற, பாரம்பரியம் மிக்க பழப் பயிர் கள், மலர்கள், காய்கறிகளை அடை யாளப்படுத்த புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில், மல்லிகைப் பூக் கள் நாடு முழுவதும் உற்பத்தி செய் யப்பட்டாலும் மதுரை குண்டுமல் லிக்கு உள்ள சிறப்பே தனிதான். குண்டு குண்டாக தடிமனான இதழ் களுடன் இயற்கையாக கூடுதல் மணத்துடனும், எளிதில் உதிரா மலும், பால் நிறத்தில் நீளமான காம்புடன் காணப்படுகிறது. நீர்ச் சத்து குறைவாக இருப்பதால் இரண்டு, மூன்று நாட்கள் வைத் திருந்தாலும் மதுரை மல்லி வாடாது. அதனால், மதுரை மல்லியை அடை யாளப்படுத்தவும், உற்பத்தியை ஊக்குவிக்கவும், புவிசார் குறியீடு வழங்கி உள்ளனர்.

திண்டுக்கல், தேனி, ராமநாத புரத்தை உள்ளடக்கிய ஒருங்கி ணைந்த மதுரை மாவட்டத்தில் இந்த பூக்கள் அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது. மதுரை குண்டுமல்லியை சர்வதேச அள வில் அடையாளப்படுத்தவும், தொடர் ஆராய்ச்சி மேற்கொண்டு உற்பத்தியை பரவலாக்கி ஏற்று மதியை அதிகரிக்கவும் மதுரையில் மல்லிகை மகத்துவ மையம் (Centre of Excellence for Jasmine) அமைக்க நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், மதுரையில் 25 ஏக்கரில் ரூ.5.50 கோடி செல வில் 25 மல்லிகை மகத்துவ மையம் அமைக்க தேசிய தோட்டக்கலைத் துறை இயக்கத்துக்கு தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை பரிந்துரைத் துள்ளது.

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது;

ஒவ்வொரு இடத்திலும் விளை யும் பாரம்பரியம் மிக்க, சிறப்பு மிக்க விளைபொருட்கள் உற்பத் தியை அதிகரிக்க, தேசிய தோட் டக்கலைத் துறை இயக்கம் மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் தமிழகத்தில் மகத்துவ மையங் களை அமைத்து வருகிறது.

அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரத்தில் சமவெளி காய்கறிகள் உற்பத் திக்கும், ஊட்டியில், மலைப் பிரதேச காய்கறிகளுக்கும், கிருஷ்ணகிரி மாவட்டம், தளியில் மலர்களுக்கும் மகத்துவ மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. திருச்சியில் பழப்பயிர்களுக்கும், கன்னியாகுமரியில் தேனீக்களுக் கும் மகத்துவ மையங்கள் அறி வித்து, அதற்கான பணிகள் நடக் கின்றன.

அதுபோல, மதுரை குண்டு மல்லிக்கு மதுரையில் மகத்து வம் மையம் அமைப்பதற்கான திட்டம் தேசிய தோட்டக் கலைத்துறை இயக்கத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அத னால், இந்த ஆண்டுக்குள் மல்லிகை மகத்துவ மையம் அறிவிக்க வாய்ப்பு உள்ளது. அதற்கான துறைரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மகத்துவ மையத்தால் என்ன பலன்?

மல்லிகை மகத்துவ மையம் அமைக்கப்பட்டால், சர்வதேச அளவில் மதுரை குண்டுமல்லிக்கு அங்கீகாரம், வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சீஸன் இல்லாத நேரத்தில் விளைவிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள், ரகங்கள் கண்டுபிடிக்கப்படும். விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாசனைத் திரவிய தொழிற்சாலைகள் அமைந்து தொழில் வளம் பெருக வாய்ப்பு ஏற்படும்.

மதுரையில் குண்டுமல்லி தொன்றுதொட்டு விசேஷமாக பெயரெடுத்துள்ளதால் இந்த பூக்களை விமானம் மூலம் இறக்குமதி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர். மதுரையில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் மகத்துவ மையம் அமைந்தால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும். 25 ஏக்கரில் ரூ.5.50 கோடி செலவில்

மகத்துவ மையத்தால் என்ன பலன்?

மல்லிகை மகத்துவ மையம் அமைக்கப்பட்டால், சர்வதேச அளவில் மதுரை குண்டுமல்லிக்கு அங்கீகாரம், வெளிநாட்டு ஏற்றுமதி மூலம் கூடுதல் விலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. உற்பத்தியை அதிகரிக்க ஆராய்ச்சிகள் மேற்கொண்டு சீஸன் இல்லாத நேரத்தில் விளைவிப்பதற்கான புதிய தொழில்நுட்பங்கள், ரகங்கள் கண்டுபிடிக்கப்படும். விவசாயிகளுக்கு அதிக மானியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வாசனைத் திரவிய தொழிற்சாலைகள் அமைந்து தொழில் வளம் பெருக வாய்ப்பு ஏற்படும்.

மதுரையில் குண்டுமல்லி தொன்றுதொட்டு விசேஷமாக பெயரெடுத்துள்ளதால் இந்த பூக்களை விமானம் மூலம் இறக்குமதி செய்ய வெளிநாட்டினர் விரும்புகின்றனர். மதுரையில் சர்வதேச விமான நிலையம் இருப்பதால் மகத்துவ மையம் அமைந்தால் ஏற்றுமதி வாய்ப்பும் அதிகரிக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x