Last Updated : 09 Feb, 2017 09:02 AM

 

Published : 09 Feb 2017 09:02 AM
Last Updated : 09 Feb 2017 09:02 AM

ஜானகி அம்மாள் ஆட்சியை கவிழ்க்க 33 எம்எல்ஏ-க்களை பாதுகாத்தது எப்படி? - சாதித்துக் காட்டிய கட்சி பிரமுகர் தகவல்

அதிமுக உடைந்தபோது 33 சட்டப்பேரவை உறுப்பினர்களை ஊர், ஊராக அழைத்துச் சென்று பாதுகாத்ததால், திட்டமிட்டபடி ஆட்சியை கலைக்க முடிந்தது. தற்போதைய சூழலில் இது சாத்தியமில்லாதது என எம்எல்ஏ-க் களை அழைத்துச் சென்றதில் முக்கிய பங்காற்றிய அரசியல் கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அந்த பிரமுகர் கூறியதாவது: தமிழகத்தின் முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ல் உயிரிழந்தார். அதன்பின், இடைக்கால முதல் வராக நெடுஞ்செழியன் பொறுப் பேற்றார். அடுத்த ஒரு வாரத்தில் சட்டப் பேரவைக் கூட்டம் நடந்த போது எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகிதான் தமிழக முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என சட்டப்பேரவை உறுப்பினர்கள் பலர் குரல் எழுப்பினர்.

ஆனால், ஜெயலலிதா ஆதரவாளர்களிடையே இதற்கு எதிர்ப்பு எழுந்தது. அப்போதைய சூழ்நிலையில், அதிமுக பிளவு படும் சூழல் ஏற்பட்டது. அடுத்ததாக நடைபெறும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஜானகி மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர ஜெயலலிதா ஆதரவாளர்கள் திட்டமிட்டனர்.

அப்போது ஜெயலலிதாவுக்கு பக்கபலமாகச் செயல்பட்ட சாத்தூர் ராமச்சந்திரன், திருநாவுக்கரசர் ஆகியோர் மூலம் 33 எம்எல்ஏ-க் கள் கடத்தப்பட்டனர். இவர்கள் அனைவரும் விமானம் மூலம் நாசிக் அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு வாரத்துக்குப் பிறகு மும்பை சென்றனர். பின்னர் திருவனந்த புரத்தில் தங்க வைக்கப்பட்டனர். அங்கிருந்து 33 எம்.எல்.ஏ.க்களும் விருதுநகர் அழைத்து வரப்பட்ட னர். விருதுநகரில் சாத்தூர் ராமச்சந்திரனுக்குச் சொந்தமான மில்லில் தங்க வைக்கப்பட்ட னர். மில்லைச் சுற்றி, நூற்றுக் கணக்கான ஆதரவாளர்கள் நிறுத்தப்பட்டனர். அங்கேயே ஜெயலலிதாவுக்கு ஆதரவாக கடிதம் பெறப்பட்டது. இந்த கடிதம் மூலம் ஜானகி ராமச்சந்திரன் ஆட்சி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

அதே வேளையில், ஜானகி தரப்பினர் 92 எம்எல்ஏக்களை சென்னை பிரசிடெண்ட் ஹோட்ட லில் வைத்திருந்தனர். இருப்பினும் சட்டப்பேரவையில் முதல்வர் ஜானகி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு ஆட்சி கலைக்கப்பட்டது.

தமிழகத்தில் தற்போது இது போன்ற அரசியல் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால், யார் எப்படி பணியாற்றப் போகிறார்கள் என்பதில் குழப்ப மாக உள்ளது. அப்போது கட்சியில் ஈடுபாட்டுடன் செயல்பட்டோம். ஆனால், இதுபோன்று இப்போது யாரும் இருப்பதாகத் தெரியவில்லை. எம்எல்ஏ-க்களை தங்கள் பிடிக்குள் கொண்டுவரும் அளவுக்கு இப்போது வேகமான ஆட்களும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x