Published : 13 Feb 2014 07:42 PM
Last Updated : 13 Feb 2014 07:42 PM
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2014-15 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட்ட அறிவிப்புகள்:
2014-2015 ஆண்டில் பல்வேறு திருமண உதவித் திட்டங்களுக்காக 751.09 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 204 கோடி ரூபாய் திருமாங்கல்யத்திற்கான தங்க நாணயங்கள் வாங்குவதற்காகவும், 547.09 கோடி ரூபாய் பண உதவிக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்துக்காக 105 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழவர் பாதுகாப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு 2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் 4,200 கோடி ரூபாயாக உயத்தப்பட்டுள்ளது.
விலையில்லா பொருள்கள்...
கடந்த மூன்று ஆண்டுகளில், 95 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்களை இந்த அரசு வழங்கி வருகிறது.
வருண் நிதியாண்டில் மேலும் 35 லட்சம் குடும்பங்களுக்கு விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர்கள் வழங்கப்படும். 2014-2015 ஆண் ஆண்டிற்கு இத்திட்டத்திற்காக 2,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வருண் நிதியாண்டில் தேவைப்படும் இடங்களில், 17.50 கோடி ரூபாய் செலவில் பணிபுரியும் பெண்கள் தங்கும் 14 விடுதிகள் புதிதாக அமைக்கப்படும்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் மாநிலத்தின் ஆண்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக 7,603 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மொத்தத் திட்ட ஒதுக்கீட்டில் 18.02 சதவீதமாகும்.
கடும் ஊனமுற்றவர்கள், மன வளர்ச்சி குன்றியவர்கள் மற்றும் தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும்
மாதாந்திர உதவித் தொகை 500 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது. இதனால் 1,08,530 பேர் பயன்பெற்று வருகின்றனர். வரும் நிதியாண்டிலிருந்து இவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.
2014-2015 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் ஓய்வூதியப் பலன்களுக்காக 16,021 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT