Published : 23 Sep 2016 08:24 AM
Last Updated : 23 Sep 2016 08:24 AM
மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் பறக்கும் ரயில் சேவையை இணைப்பது குறித்து முழுமையாக ஆராய விரைவில் நிறுவனம் தேர்வு செய்யப்படவுள்ளது.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இந்தத் திட்டத்தை நிறைவேற்ற சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் 1971-ம் ஆண்டு தீர்மானித்தது. முதல்கட்டமாக சென்னை கடற்கரை - மயிலாப்பூர் இடையே 9 கி.மீ தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு 1997-ம் ஆண்டு நிறைவடைந்தது. 2-வது கட்டமாக மயிலாப்பூர் - வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் திட்டப்பணி ரூ.877.59 கோடி செலவில் 2007-ம் ஆண்டு முடிக்கப்பட்டது.
தற்போது, சென்னை கடற்கரை வேளச்சேரி இடையே தினமும் 150 மின்சார ரயில்கள் இயக்கப் படுகின்றன. வேளச்சேரியையும் - பரங்கிமலையையும் இணைக்கும் பறக்கும் ரயில் திட்டப்பணி கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. மொத்தமுள்ள 5 கிலோ மீட்டரில் 4.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக் கப்பட்டுள்ளது. ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் நிலம் கையகப்படுத்த சிலர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இப்பணியில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத் துடன் இணைக்க திட்டமிடப்பட் டுள்ளது. இது தொடர்பாக முழுமை யாக ஆராய புதிய நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுடன் இணைக்க ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஒருங்கிணைந்த ரயில் சேவையை அளிக்க முடியும். பயணிகள் விரை வாக சேவை பெற முடியும். வழக்க மான பயணிகள் மட்டுமல்லாமல், சொந்த வாகனங்களை பயன் படுத்துவோருக்கும் ஏற்ற வகை யில் புதிய வசதிகளை கொண்டுவர வுள்ளோம். பயணிகள் சொகுசாக பயணம் செய்யும் வகையில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் ஏசி வசதி, ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்தும் வசதி, ரயில் நிலையங்களில் உயர்த்தர உண வகங்கள், காப்பி ஷாப், முக்கிய ரயில் நிலையங்களில் வணிக வளாகங்களையும் திறக்கவுள்ளாம். மேலும், விடுமுறை நாட்களில் பயணிகள், குழந்தைகளை கவர விளையாட்டு நிகழ்ச்சிகள், கண்காட்சிகளும் நடத்தப்படும். இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு கட்ட ஆலோசனையும் நடத்தி உள்ளோம்.
இந்நிலையில், பறக்கும் ரயில் சேவையை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் இணைப்பதற்கான செலவு, நிதி, ரயில்கள் இயக்கம், நிலம், சொத்து மதிப்பு உள்ளிட்டவை குறித்து நிறுவனம் மூலம் முழுமையாக ஆய்வு நடத்த டெண்டர் வெளியிட்டுள்ளாம். ஏசி வசதியுடன் கூடிய ரயில்கள், ரயில் நிலையங்களை மேம்படுத்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளவுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT