Published : 08 Jun 2016 09:08 AM
Last Updated : 08 Jun 2016 09:08 AM
பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸாரின் வசதிக்காக தமிழ கத்தின் அனைத்து மாவட்டங் களுக்கும் நடமாடும் கழிப்பிட வாகனம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட போலீஸார் உள்ளனர். தேர்தல், அரசியல் தலைவர்கள் வருகை, கோயில் விழாக்கள், போராட்டம், கலவரம், மோதல் உள்ளிட்ட சம்பவங்களின்போது, வெவ்வேறு மாவட்டங்களுக்கும் சென்று போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.
மாவட்டத்துக்கு 2 வீதம்
அந்த சமயங்களில், கிடைத்த இடங்களில் போலீஸார் தங்க வேண்டியுள்ளது. அப்போது கழிப்பிட வசதியின்றி பெரிதும் அவதிப்படுகின்றனர். இதைக் கருத் தில் கொண்டு, தமிழக அரசு 32 மாவட்டங்களுக்கும் ஆண், பெண் போலீஸாருக்கு தனித் தனியே, தலா ஒரு நடமாடும் கழிப் பிட வாகனம் வீதம் ஒரு மாவட் டத்துக்கு 2 நடமாடும் கழிப்பிட வாகனங்களை வழங்கியுள்ளது.
இந்த வாகனத்தில் தண்ணீர் வசதியுடன் மேற்கத்திய, இந்திய கழிப்பிடங்கள் தலா 2, ஒரு உடை மாற்றும் அறை, முகம் பார்க்கும் கண்ணாடியுடன் கூடிய 2 வாஷ்பேசின்கள், ஒரு குப்பைக் கூடை ஆகியவை உள்ளன.
கரூருக்கு 2 வாகனங்கள்
இந்த வாகனங்கள் சென்னை யில் இருந்து நேற்று முன்தினம் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. கரூர் மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட 2 வாகனங்கள் கரூர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத் துக்கு நேற்று வந்தன. காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே அவற்றைப் பார்வையிட் டார்.
இதுகுறித்து போலீஸார் தரப் பில் கூறும்போது, “பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் போலீஸார் கழிப்பிட வசதி இல்லாததால், இயற்கை உபாதைகளைத் தீர்க்க முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வந்தனர். அவர்களது சிரமத்தைப் போக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் ஆண், பெண் போலீஸாருக்கு தனித்தனியே நடமாடும் கழிப்பிட வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பாதுகாப்புப் பணிக்கு போலீஸார் செல்லும் இடங்களுக்கு இந்த வாகனங்கள் அனுப்பிவைக்கப்படும்” என் றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT