Published : 20 Apr 2017 08:43 AM
Last Updated : 20 Apr 2017 08:43 AM
சமீபத்தில் அழுத்தமான திரைக் கதையால் கவனம் ஈர்த்தது ‘8 தோட்டாக்கள்’ திரைப்படம். காவல் துணை ஆய்வாளரின் துப்பாக்கி தொலைந்துபோனதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை அது. நிஜத்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது உண்டு. சமீபத்தில் செங்கல்பட்டில் தனது தோட்டாக்களை தொலைத்தார் ஆயுதப்படை காவலர். பின்னர் அது கோயம்பேட்டில் மீட்கப்பட்டது. அம் பேத்கர் பிறந்த நாளில் மரியாதை செலுத்தும்போது உணர்ச்சிவசப் பட்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டார் இன்னொரு காவலர்.
பல்வேறு காரணங்களால் காவ லர்கள் தங்களையே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பு சேலத்தில் பணிபுரிந்த காவல் துறை ஆய் வாளர் ஒருவர், குற்றம்சாட்டப் பட்டவர் அதிகமாக பேசியதால் ஆத்திரப்பட்டு வாய்க்குள் துப்பாக்கியை விட்டு சுட்டுக்கொன்ற சம்பவம்கூட நடந்தது.
போலீஸாரின் துப்பாக்கி, தோட் டாக்கள் எவ்வளவு முக்கிய மானவை, இவை தொலைந்தால் என்ன ஆகும்? அவற்றை காவலர் கள் எவ்வாறு பாதுகாப்பாக வைத் திருக்க வேண்டும்? தொலைத்தால் என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? இதுகுறித்து ஓய்வுபெற்ற காவல் உதவி ஆணையர் பீர் முகமது ‘தி இந்து’விடம் கூறியதாவது:
காவலர்களாகப் பொறுப்பேற் கும் ஒவ்வொருவருக்கும் துப்பாக் கியைக் கையாளப் பயிற்சி அளிக் கப்படும். முன்பு ஓராண்டு பயிற்சி கொடுக்கப்பட்டது. தற்போது கான்ஸ்டபிள்களுக்கு 6 மாதப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற் காகவே சென்னையில் மாம்பாக்கம், அனுமந்தபுரம், நெல்லையில் வளநாடு என ஒவ்வொரு மாவட்டத்திலும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையங்கள் உண்டு.
ஆயுதப்படைக் காவலர்கள் தொடங்கி ஐபிஎஸ் வரை துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடுகள் உண்டு. இவர்களில் யாராக இருந்தாலும் பணிநேரத்தின்போது மட்டுமே துப்பாக்கி வைத்திருக்க வேண்டும். பணியில் இல்லாத நேரத்தில் துப்பாக்கியைத் தொடவே கூடாது. ஆயுதப்படைக் காவலர் மையத்தில் ஆயுதக்கிடங்கு இருக் கும். காவலர்கள் ஒவ்வொருவரும் துப்பாக்கி, தோட்டாக்களை எடுக் கும்போதும், மீண்டும் ஒப்படைக் கும்போதும் அங்கிருக்கும் பதிவேட் டில் தேதி, நேரம், காரணம் எழுதி கையெழுத்திட வேண்டும். இதைப் பார்வையிட ஒரு காவலர் இருப்பார்.
சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைப் பொறுத்தவரை, துணை ஆய்வாளர் தொடங்கி ஐபிஎஸ் அதிகாரி வரை பணி நேரத்தில் துப்பாக்கியைப் பயன்படுத்த அனுமதி உண்டு. இவர்களுக்கு பிஸ்டல் அல்லது ரிவால்வர் வழங்கப்படும். இவர் களும் காவல் நிலையத்தின் பொருட் கள் அறையில் ஒவ்வொரு முறையும் துப்பாக்கியை எடுக்கும்போதும், மீண்டும் ஒப்படைக்கும்போதும் பொது குறிப்பேட்டில் தேதி, நேரம், காரணம் எழுதி கையெழுத்திட வேண்டும். துப்பாக்கி, ரிவால்வர், பிஸ்டல் அனைத்தையும் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை சர்வீஸ் செய்ய வேண்டும். இதற்காக பிரத்யேக நபர்கள் உள்ளனர்.
பிஸ்டல் என்றால் 6 தோட்டாக்கள் வரை எடுத்துக்கொள்ளலாம். ரிவால் வர் எனில் 9, 11 அல்லது 13 வரை எடுத்துக்கொள்ளலாம். அதிமுக்கிய மான பணி எனில் தகுந்த காரணத் தைக் குறிப்பிட்டு மேலும் அதிக தோட்டாக்களை எடுத்துக்கொள்ள லாம். ஆனால், ஒவ்வொரு தோட்டாவுக்கும் கட்டாயம் கணக்கு காட்டவேண்டும்.
துப்பாக்கி அல்லது தோட்டா தொலைந்தால் சம்பந்தப்பட்ட காவலர் மீது தமிழ்நாடு காவல்துறை ஒழுங்கு நடவடிக்கை துணை நிலை விதிகள் 1955-ன்படி கட்டாயம் நட வடிக்கை எடுக்கப்படும். தெரிந்து தொலைத்தார்களா, தெரியாமல் தொலைத்தார்களா என்பதை எல் லாம் சட்டம் ஏற்காது. முதலில் தற் காலிக பணிநீக்கம் செய்யப்படு வார்கள். பிறகுதான் விசாரணை தொடங்கும். நியாயமான காரணம் என்று விசாரணையில் தெரிந்தால், பதவி உயர்வை லேசாக பாதிக்கிற 3-பி போன்ற சிறு தண்டனையுடன் முடிந்துவிடும். சரியான காரணம் இல்லாவிட்டால், பணிநீக்கம் வரை கூட நடவடிக்கை எடுக்க முடியும். எதுவாக இருந்தாலும் தொலைந்து போன பொருட்கள் திரும்ப கிடைக்காவிட்டால் அதற்குரிய தொகை காவலரின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும்.
வாக்கிடாக்கி, வயர்லெஸ், சீருடையின் நட்சத்திரம், தொப்பி உள்ளிட்ட பொருட்களுக்கும் மேற் கண்ட விதிமுறைகள் பொருந்தும். ஆனால், இவை ஆபத்து இல் லாதவை என்பதால், தொலைத் தால் தண்டனை சற்று குறை வாகவே இருக்கும்.
ஐபிஎஸ் அதிகாரிகள் பலர் எந்நேரமும் துப்பாக்கி வைத்திருப்ப தாக கூறப்படுகிறது. சட்டம் அனு மதிக்காவிட்டாலும் பணி சூழல், பாதுகாப்பு காரணங்களுக்காக விதிவிலக்காக சிலர் துப்பாக்கி வைத்திருப்பது உண்டு. பெரும் பாலும் ஐபிஎஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் துப்பாக்கி வைத்துக்கொள்ள உரிமம் பெற் றிருப்பார்கள். அந்த வகையில் அவர் கள் துப்பாக்கி வைத்திருக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT