Published : 30 Jan 2017 10:33 AM
Last Updated : 30 Jan 2017 10:33 AM

ரயில்வேயில் ரத்து செய்யப்படும் டிக்கெட் தொகை கிடைப்பதில் தாமதம்: ஐஆர்சிடிசி நடவடிக்கை எடுக்குமா?

ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட் தொகை திரும்ப கிடைப் பதில் தாமதம் ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இத்தொகை உடனடியாக கிடைக்க ஐஆர்சிடிசி ஏற்பாடு செய்ய வேண்டுமென பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தையே முதலில் தேர்வு செய்கின்றனர். இதில் தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 65 சதவீதம் பேர் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மீத முள்ளோர் முன்பதிவு மையங் களில் டிக்கெட் முன்பதிவு செய் கின்றனர். கடைசி நேரம் வரையில் டிக்கெட் உறுதியாகாதது மற்றும் பல்வேறு அவசர காரணங்களால் பயணிகள் சிலர் பயணத்தை மாற்றிவைத்து ரயில் டிக்கெட்டை ரத்து செய்கின்றனர்.

ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்துக்கு முன்பாக ரத்து செய்தால் மட்டுமே 50 சதவீத பணம் திருப்பியளிக்கப்படும். காத்திருப்பு பட்டியல், ஆர்.ஏ.சி. டிக்கெட்களை பொறுத்தவரை, ரயில் புறப்படுவதற்கு அரை மணிநேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே பணம் திருப்பியளிக்கப்படும் என்பது நடைமுறையில் இருக்கிறது. டிக்கெட் ரத்து செய்த பிறகு 3 அல்லது 5 நாட்களில் கட்டண தொகை திருப்பி அளிக்கப்படும் என ரயில்வேதுறை அறிவித் துள்ளது. ஆனால், டிக்கெட் ரத்து செய்து 15 நாட்கள் ஆகியும் தொகை திரும்ப கிடைக்காத தால் பொதுமக்கள் அவதிப்படு கின்றனர்.

இது தொடர்பாக பயணிகள் சிலர் கூறும்போது, “ரயில்வே துறையில் இணையதள வசதியை பயன்படுத்தி பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவதை வரவேற்கிறோம். ஆனால், ரத்து செய்யப்படும் டிக்கெட் தொகையை திரும்ப அளிப்பதில் தாமதம் ஏற்படுவது ஏன் என்று தெரியவில்லை. ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் ரத்து செய்த பிறகு, ‘அடுத்த இரண்டு நாட்களில் உங்களது வங்கி கணக்கில் தொகை திரும்பிவிடும்’ என்ற குறுந்தகவல் செல்போனுக்கு வந்து விடுகிறது. ஆனால், அந்த தொகை எங்களது கணக்கில் வந்து சேர 15 நாட்கள் ஆகிவிடுகிறது. எனவே, ரயில்வேத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாக ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, “டிக்கெட் ரத்து செய்யப்பட்ட வுடன் அதற்கான தொகையை உடனடியாக திரும்ப அனுப்பி விடுகிறோம். அதிகபட்சமாக 5 நாட்களுக்குள் பயணிகளுக்கு தொகை சென்றடைய வேண்டு மெனவும் வங்கிகளுக்கு உத்தர விடுகிறோம். ஆனால், பயணி களுக்கு இந்த தொகை சென் றடைவதில் தாமதம் ஏற்படுகிறது. இது தொடர்பாக நாடுமுழுவதும் பல்வேறு இடங்களில் மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் சமீபத்தில் பல்வேறு வங்கி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இந்த பிரச்சினையை எடுத்து கூறி னோம். இதை சரி செய்வதற்கான நடவடிக்கையை எடுப்பதாக அவர்கள் உறுதி கூறியுள்ளனர்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x