Published : 07 Oct 2014 10:46 AM
Last Updated : 07 Oct 2014 10:46 AM
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே ஜடேரி என்ற கிராமத்தில் பல தலைமுறைகளாக நாமக்கட்டி தயாரிக்கப்பட்டு வருகிறது. அந்த கிராமத்தில் வாழும் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், நாமக்கட்டி தயாரிப்பதை குடிசைத் தொழிலாக செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி, திருப்பதி உட்பட நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிநாடு களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகிறது.
தயாரிப்பது எளிதல்ல
இதுகுறித்து நாமக்கட்டித் தயாரிப்பாளர்கள் கூறும்போது, ‘‘நாமக்கட்டி தயாரிக்கத் தேவைப் படும் மண், தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் கிடைக்கிறது. அதை வெட்டி எடுத்து வந்து உடைத்து, செக்கு இழுப்பதைப் போன்று மாடு கட்டி இழுத்து பவுடராக மாற்றுவோம். அதன் பிறகு, அதனை தண்ணீரில் கரைப்போம். ஓரிரு நாட்களில் கழிவுகள், கீழே படிந்துவிடும். மேலே இருக்கும் ‘பாலை’ மட்டும் பிரித்து தொட்டி யில் ஊற்றுவோம். அவ்வாறு செய்யும்போது, நாமக்கட்டி தயாரிப்புக்கு உகந்த மண் கிடைத்து விடும். அதனை வெயிலில் பதப்படுத்தி காய வைத்து, நாமக்கட்டி தயாரிப்பதற்கான பக்குவத்துக்கு கொண்டு வந்துவிடுவோம். அதன்பிறகு நாமக்கட்டியைத் தயாரிப்போம்.
தென்பூண்டிப்பட்டு கிராம புறம்போக்கு இடத்தில் இருந்து, மண்ணை வெட்டி எடுத்து வந்தோம். அதற்கு அக்கிராம மக்கள் திடீர் எதிர்ப்பு தெரிவித்ததால், கடந்த 8 ஆண்டுகளாக தனியார் இடத்தில் இருந்து எடுத்து வருகிறோம். 3 டயர் வண்டி அளவு உள்ள மண் விலை ரூ.2,700. கூலி ஆட்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.50 வரை கூலி வழங்குகிறோம். சென்னை போன்ற பிற ஊர்களில் 3 ஆயிரம் நாமக் கட்டிகள் ரூ.400-க்கும், திருப்பதி யில் மட்டும் 50 கிலோ நாமக்கட்டி ரூ.800-க்கு (5 ஆயிரம் துண்டுகள்) கொடுக்கிறோம். புரட்டாசி மாதம் என்பதால் இந்த விலை. மற்ற மாதங்களில் ரூ.100 வரை குறைவாகத்தான் கிடைக்கும்.
விலகிச் செல்ல மனமில்லை
இத்தொழிலில் லாபம் கிடைக் காததால், செய்யாறு சிப்காட் தொழிற்சாலைகளுக்கு பலர் சென்றுவிட்டனர். தலைமுறை, தலைமுறையாக இந்தத் தொழி லைச் செய்து வருவதால், விலகு வதற்கு மனமில்லை. விவசாயப் பணிக்குச் சென்றுவிட்டு, ஓய்வு கிடைக்கும் நேரத்தில் நாமக் கட்டியைத் தயாரிக்கிறோம். எங்க ளுக்கு இலவசமாக மண் கொடுக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணைக் கரைப்பதற்கு தேவையான தண்ணீர் கிடைக்க வழி காண வேண் டும். எங்களுக்காக கூட்டுறவுச் சங்கம் தொடங்க வேண்டும்.
ஜடேரியில் நாமக்கட்டி கொள் முதல் நிலையத்தை தொடங்க வேண்டும். நாமக்கட்டிக்கு உரிய விலையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது நீண்ட கால கோரிக்கை.
ஒவ்வொரு தேர்தலிலும் வாக்குறுதி கொடுப்பவர்கள், அதன்பிறகு எங்களை கண்டு கொள்வது கிடையாது” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT