Published : 25 Jul 2016 09:13 AM
Last Updated : 25 Jul 2016 09:13 AM

மின்வாரிய களப்பிரிவில் 20 ஆயிரம் காலி பணியிடங்கள்: கூடுதல் வேலைப்பளுவால் மன அழுத்தத்தில் பணியாளர்கள்

தமிழக மின்வாரிய களப்பிரி வில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் இருப்பதால், கூடுதல் வேலைப்பளு காரணமாக களப்பணியாளர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கின்றனர்.

தமிழகத்தில் இரண்டரை கோடி மின் நுகர்வோர் உள்ளனர். இவர் களுக்கான மின் உற்பத்தி, விநியோ கம், மின்கட்டண கணக்கீடு மற்றும் வசூல், பராமரிப்புப் பணிகளை மேற் கொள்ள தமிழ்நாடு மின்சார வாரி யத்தில் மொத்தம் 72 ஆயிரம் மின் பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.

பொதுமக்களுக்கு மின்சாரம் விநியோகிப்பது, நுகர்வோர் வீட்டில், மின் தொடர்களில் ஏற்ப டும் தடங்கலை சரி செய்வது, மின் கட்டணம் செலுத்தாத மின் இணைப்புகளைத் துண்டிப்பது, பணம் செலுத்தியவுடன் மறு மின் இணைப்பு வழங்குவது, மின்மாற் றி, மின் தொடரை புதிதாக அமைப் பது, பராமரிப்பது, இரவுப்பணி, விடுமுறை நாள் பணி, அவசரப் பணி என பல்வேறு பணிகளை மேற்கொள்கின்றனர்.

இதுபோன்ற களப்பணிகளை செய்வதற்கு 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வேலைப்பளு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வளவு பணிகளைப் பார்க்க வேண்டிய பகிர்மானப் பிரிவு அலுவலகங்களில் வேலைப்பளு ஒப்பந்தப்படி பணியாளர்களை மின்வாரியத்தில், கடந்த பல ஆண்டுகளாக நியமிக் கப்படவில்லை எனக் கூறப்படு கிறது. மின் துண்டிப்பு செய்திட மிகக் குறைந்த பணியாளர்கள்தான் உள்ளனர். வேலைப்பளு காரண மாக தாமதமாக மின் துண்டிப்பு செய்யும் களப் பணியாளர்கள் மீது நிர்வாகம் நடவடிக்கை எடுக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய ஜனதா தொழிலாளர் சங்க மதுரை மண்டலத் தலைவர் சசாங்கன் கூறியதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் சுமார் 2,600-க்கும் மேற்பட்ட பிரிவு அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒரு பிரிவு அலுவலகத்தில் குறைந்தபட்சம் சராசரியாக 6 கம்பியாளர்களும், 6 உதவியாளர்களும் சேர்த்து 12 பேர் இருக்க வேண்டும். ஆனால், 2 அல்லது 4 பேர் மட்டுமே உள்ளனர்.

சில பிரிவுகளில் மேற்பார்வை செய்யும் போர்மேன், லைன் இன்ஸ்பெக்டர் தவிர கம்பியாளர், உதவியாளர் யாரும் இல்லாத நிலையும் உள்ளது. சுமார் 20,000க்கும் மேற்பட்ட காலி யிடங்கள் களப்பிரிவில் உள் ளன. இதனால், பல்வேறு பணிகள் பாதிக்கப்படுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன்பு, பிரிவு அலுவலகங்களுக்கு காவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தற்போது அப்பணியிடமே முழுமையாக அகற்றப்பட்டுவிட்டது.

இதனால், பகல் முழுவதும் வேலை செய்யும் களப்பணி யாளர்களில் ஒருவர் இரவுநேர அவசரப் பணிக்காக நியமிக்கப்ப டுகிறபோது, காவல் பணியையும் சேர்த்து அவர் பார்க்க நேரிடுகிற து. இதற்காக அவருக்கு கூடுதல் படிகள் எதுவும் வழங்கப்படுவது கிடையாது. இரவுப் பணி பார்க்கும் பணியாளர்களுக்கு சில பிரிவுக ளில் மறுநாள் ஓய்வும் வழங்கப்ப டுவதும் இல்லை என்றார்.

இதுகுறித்து மின்வாரிய வட்டா ரத்தில் விசாரித்தபோது, காலிப்ப ணியிடங்கள் படிப்படியாக நிரப்பப் படுகிறது என்று பதிலளித்தனர்.

துப்புரவு பணியாளர்கள் இல்லை

சசாங்கன் மேலும் கூறியதாவது: 2001-ம் ஆண்டுக்குப் பின் தொடங்கப்பட்ட பிரிவு அலுவலகங்கள் மற்றும் துணை மின் நிலையங்கள் பலவற்றுக்கு துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. தண்ணீர் வசதியும் செய்து கொடுப்பதில்லை. இதனால், கழிப்பறைகள் பராமரிப்பின்றி பயன்படுத்த இயலாத நிலையில் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மின்வாரிய பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இதனால் பெண்கள் (முதல்நிலை அலுவலர் உட்பட) மிகுந்த சிரமங்களை சந்திக்கின்றனர். மிகுந்த மன அழுத்தத்துடன் பணிபுரிய வேண்டியுள்ளது. பொதுமக்களுக்கு துரித சேவையை தொய்வில்லாமல் வழங்க புதிய பணியாளர்களை உடனே தேர்வுசெய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x