Published : 13 Mar 2017 08:06 AM
Last Updated : 13 Mar 2017 08:06 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருமுறை வெற்றிபெற்ற தொகுதி யான ஆர்.கே.நகர் தொகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பண்ணை பசுமை கடை திறக்கப் பட்டுள்ளது.
நகர்ப்புறங்களில் காய்கறி விலையை கட்டுக்குள் வைக்கவும், விவசாயிகளின் விளை பொருட்க ளுக்கு உரிய விலை கிடைக்கவும் கூட்டுறவுத் துறை சார்பில் கடந்த 2013-ல் சென்னை யில் பண்ணை பசுமை கடைகள் திறக்கப்பட்டன. தற்போது சென்னையில் இரு நகரும் கடைகள் உட்பட 72 காய்கறி கடைகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் இதுவரை 17 ஆயிரம் டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மேலும் கூட்டுறவுத் துறை சார்பில் 106 அம்மா மருந்தகங்கள் உள்பட 294 மருந்தகங்களும் செயல்பட்டு வருகின்றன. இங்கு, மருந்துகள் 15 சதவீத தள்ளுபடி விலையில், இதுவரை ரூ.350 கோடிக்கு மேல் விற்கப்பட்டுள்ளன.
அனைத்து பண்ணை பசுமை கடைகளுக்கும் முன்மாதிரியாக இருக்கும் வகையில், கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், பண்ணை பசுமை காய்கறி கடை, மளிகை பொருட்கள், பழங்கள் மற்றும் மருந்துக் கடை ஆகியவை இணைந்த கடை ஒன்றை திறக்க கூட்டுறவுத்துறை திட்டமிட்டிருந்தது. இதற்கு சென்னை மாநகராட்சிக்கு சொந்த மான, 43-வது வார்டுக்கு உட்பட்ட ராயபுரம் ஜீவரத்தினம் சாலையில் உள்ள 800 சதுரடி பரப்பளவு இடம் கூட்டுறவு நிறுவனமான டியூசிஎஸ்-க்கு வழங்கப்பட்டுள்ளது. அங்கு, பயன்படுத்தாத நிலையில் இருந்த கழிப்பறை இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அங்கு தற்போது நவீன பண்ணை பசுமை கடை திறக்கப்பட்டுள்ளது. அதில் காய்கறிகளுடன், மளிகை பொருட்கள், பழங்கள், ஐஸ் கிரீம்கள், குளிர்பானங்கள், மருந்து உள்ளிட்டவை விற்கப்படுகின்றன. ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் அறிவிப்புக்கு சில தினங்கள் முன்பு இந்த கடை திறக் கப்பட்டுள்ளது. இவ்வளவு வசதி களுடன் இதுவரை எந்த பண்ணை பசுமை கடையும் திறக்கப்பட வில்லை. இது வாடிக்கையாளர் களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இது குறித்து, அந்த பண்ணை பசுமை கடைக்கு காய்கறி வாங்க வந்த சாந்தி கூறும்போது, “எங்கள் வீட்டுக்கு அருகில் இப்படி ஒரு கடை திறக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் பகுதியில் காய்கறி கடைகள் இல்லை. அந்த குறையை இந்த கடை போக்கியுள்ளது. காய்கறிகளும் பசுமையாக உள்ளன. சோப்பு, ஷாம்பு உள்ளிட்டவை, மற்ற கடைகளை விட விலை குறைவாக உள்ளன. இந்த கடைக்கு வரும் போது, பிரபல தனியார் வணிக வளாகங்களுக்கு சென்ற மன நிறைவை தருகிறது. தனியார் வணிக நிறுவனங்களில் உள்ள அனைத்து வசதிகளும் இந்த கடையில் உள்ளன” என்றார்.
இது தொடர்பாக கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “இந்த கடை தனியார் கடை களுக்கு இணையான உட்புற தோற் றத்துடன் மக்களைக் கவரும் வகை யில் நவீனமயமாக்கப்பட்டு, ஏசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. சென் னையில் உள்ள பண்ணை பசுமை கடைகளிலேயே, இது முன்மாதிரி கடையாக திகழும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT