Published : 31 Mar 2014 09:59 AM
Last Updated : 31 Mar 2014 09:59 AM
கூடங்குளம், மேட்டூர், நெய்வேலி, வடசென்னை மின் நிலையங்களில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதாலும், காற்றாலைகளில் உற்பத்தி குறைந்த தாலும் கடந்த 2 நாட்களாக மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வாரம் தமிழக மின் நிலை யங்களில் திடீரென கோளாறு ஏற் பட்டது. மேலும் காற்றாலை மின் உற்பத்தியும் பூஜ்ஜியமாக சரிந்தது. இதனால் தமிழகம் முழுவதும் 5 மணி நேரம் வரை மின்வெட்டு அமலானது. சென்னையிலும் ஒரு சில இடங்களில் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
மின்வெட்டால் தொழிற்துறையின ரும் பொதுத் தேர்வு எழுதும் மாணவர் களும் பாதிக்கப்பட்டனர். தேர்தல் நேரம் என்பதால் எதிர்க்கட்சியினர் மின்வெட்டை முக்கியப் பிரச்சினை யாகக் கையிலெடுத்து பிரச்சாரம் செய்தனர். இதையடுத்து, மின் துறை அதிகாரிகள் பணிகளைத் தீவிரப் படுத்தி, மின் நிலையங்களில் ஏற்பட்ட பழுதுகளை நீக்கினர். இதனால் கடந்தவாரத்தில் திங்கள், செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் ஒரே நாளில் 283 மில்லியன் யூனிட்கள் வரை மின்சாரம் உற்பத்தியானது.
இந்நிலையில், சனிக்கிழமை முதல் மீண்டும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள் ளது. சனிக்கிழமை காலை வெறும் 49 மெகாவாட் மட்டுமே காற்றாலை மூலம் உற்பத்தியானது.
இதனால் காலை நேரத்தில் வீடுகளுக்கு 1 முதல் 2 மணி நேரம் மின் வெட்டு அமலானது. தொழிற்துறையினருக்கும் 2 மணி நேரம் மின் விநியோகம் தடைபட்டது.
சனிக்கிழமை இரவில் ஒரு சில மின் நிலையங்களில் மீண்டும் கோளாறு ஏற்பட்டதால் இரவில் 2 மணி நேர மின் வெட்டு அமலானது. ஞாயிற்றுக்கிழமை காலையிலும் காற்றாலை உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்படவில்லை. வெறும் 14 மெகாவாட் மட்டுமே உற்பத்தியானது. இதனால், நகரப்பகுதிகளை தவிர மற்ற சிறு நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மின் வெட்டு அமலானது. தொழிற்கூடங்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்ப தால் மின் தட்டுப்பாட்டை ஓரளவு சமாளித்ததாக மின் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, கூடங்குளம் நிலையத்தின் முதல் அலகிலும் (1000 மெகாவாட்), வட சென்னை புதிய நிலையத்தின் 2-வது அலகிலும் (600 மெகாவாட்), மேட்டூர் புதிய மின் நிலையத்தின் முதல் அல கிலும் (600 மெகாவாட்), எண்ணூர் இரண்டாம் அலகிலும், நெய்வேலி முதல் நிலை விரிவாக்கத்தின் 210 மெகா வாட் திறனுள்ள இரண்டாம் அலகி லும், கைகா அணு மின் நிலையத்தின் 220 மெகாவாட் திறனுள்ள நான்காம் அலகிலும் மின் உற்பத்தி பாதிக்கப் பட்டிருந்தது.
இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் கூறும் போது, ‘‘அனைத்து மின் நிலையங்களும் திங்கள்கிழமைக்குள் பழுது பார்க்கப்பட்டு, மீண்டும் மின் உற்பத்தி துவங்கி விடும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT