Published : 16 Jun 2015 09:45 AM
Last Updated : 16 Jun 2015 09:45 AM

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேர மாற்றம் அமலானது: டிக்கெட் எடுக்க ஒரு நாள் வீணாவதாக புகார்

தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் நேற்று முதல் நாடு முழுவதும் அமலானது. இந்த புதிய நேர மாற்றத்தால், ஒரு நாள் வீணாகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தட்கல் ரயில் டிக்கெட் முன் பதிவு நேரம் கடந்த வாரம் திடீரென மாற்றப்பட்டது. அதன்படி, ஏசி பெட்டிகளுக்கு காலை 10 மணி முதலும் ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணி முதலும் தட்கல் டிக்கெட்டுகள் வழங்கப்படும். பயணத்துக்கு முதல் நாள் தட்கல் டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம்.

அதோடு ஐஆர்சிடிசி முகவர் கள் உட்பட அனைத்து முகவர் களும் சாதாரண டிக்கெட்டுகளை காலை 8 முதல் 8.30 மணி வரை பதிவுசெய்ய முடியாது. அதேபோல், ஏசி பெட்டிகளுக்கான தட்கல் டிக்கெட்டுகளை காலை 10 முதல் 10.30 மணி வரையும், ஏசி அல்லாத சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 முதல் 11.30 மணி வரையும் முகவர்கள் முன்பதிவு செய்ய முடியாது.

இந்த புதிய முறை நேற்று முதல் நடைமுறைக்கு வந்தது. இதனால் சென்ட்ரல், எழும்பூர், மயிலாப்பூர், மாம்பலம், திருவான்மியூர், திரிசூலம், தாம்பரம் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய நேற்று அதிகாலை 4 மணி முதல் 2 வரிசைகளில் காத்திருந்தனர். சிலர், நேற்று முன்தினம் இரவே வந்து காத்திருந்தனர்.

தட்கல் ரயில் டிக்கெட் பெற காத்திருந்த பயணிகள் கி.ராணி, க.வனிதா

ஆகியோர் கூறும்போது, ‘‘தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு முன்பு காலை 8 மணிக்கு தொடங்கியது. பின்னர், இது 10 மணியாக மாற்றப்பட்டது. தற்போது, ஏசி அல்லாத சாதாரண ரயில் பெட்டிகளுக்கு காலை 11 மணிக் குத்தான் முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத னால், நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. தட்கல் டிக்கெட் எடுப்பதற்கே ஒரு நாள் வீணாகிறது. இப்போது, கூட்டம் கொஞ்சம் குறைவாக இருப்பதால், அதிகாலையில் வந்து வரிசையில் நிற்கிறோம். இதுவே, தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் என்றால் நள்ளிரவே வந்து காத்திருக்கும் நிலை ஏற்படும். எனவே, இந்த நேரம் மாற்றத்தால் எங்களைப் போன்ற பயணிகளுக்கு எந்த பயனும் இல்லை’’ என்றனர்.

மற்றொரு பயணி கிருஷ்ணன் கூறும்போது, ‘‘தட்கல் டிக்கெட் வழங்க முன்பு ஒரே வரிசை இருக் கும். அப்போது, சாதாரண பெட்டி களில் டிக்கெட் கிடைக்காவிட்டா லும், கொஞ்சம் கூடுதல் தொகை செலுத்தி ஏசி வகுப்பில் பயணம் செய்ய முடியும். ஆனால், இனி அப்படி பெற முடியாது. ஏசி டிக்கெட் டுக்காக காத்திருந்து, பின்னர், சாதாரண பெட்டிகளில் டிக்கெட் பெற வரிசையில் நின்றால் டிக்கெட் பெற முடியாத நிலை ஏற்பட்டுள் ளது. இந்த நேரம் மாற்றத்தால் யாருக்குத்தான் பயன்?. மேலும், தட்கல் நேரம் மாற்றம் குறித்து ரயில் நிலையங்களில் எந்த அறிவிப்பும் பெரிய அளவில் இல்லை’’ என்றார்.

நேரம் மாற்றத்தால் என்ன பயன் என்பது குறித்து ரயில்வே மற்றும் ஐஆர்சிடிசி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்திய ரயில்வே வாரியம் எடுத்த முடிவை நாங்கள் அமல்படுத்துகிறோம். மற்றபடி எங்களுக்கு எதுவும் தெரியாது’’ என்கிறார்கள்.

இது தொடர்பாக டிஆர்இயு செயல் தலைவர் இளங்கோவ னிடம் கேட்டபோது, ‘‘இந்த நேரம் மாற்றத்தால் பொதுமக்கள் ஏசி வகுப்பில் இருந்து சாதாரண வகுப்பிற்கோ, சாதாரண வகுப்பில் இருந்து ஏசி வகுப்பிற்கோ டிக் கெட்டை உடனடியாக தேர்வு செய்ய முடியாத நிலை ஏற் பட்டுள்ளது. நிர்வாகத்துக்கும் எந்த பயனும் இல்லை.

இந்த நேரம் மாற்றம் மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x