Published : 10 Feb 2014 12:00 AM
Last Updated : 10 Feb 2014 12:00 AM
திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சிப் பகுதி மக்களை மற்ற ஊர் பொதுமக்கள் பொறாமையு டன் பார்க்கின்றனர். இங்கே பொது மக்களுக்காக செயல்படுத்தப் பட்டுவரும் ஒரு ரூபாய்க்கு 5 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்தான் இதற்குக் காரணம்.
கர்நாடத்தைப் போன்று..
தமிழகத்திலேயே முதல்முறை யாக திருச்சி மாவட்டம் புள்ளம் பாடியில் இந்த திட்டம் தொடங்கக் காரணமாக இருந்தவர் காங்கிரஸ் பிரமுகர் ஜெயபிரகாஷ். திருச்சி மாவட்ட காங்கிரஸ் கட்சி துணைத் தலைவராக இருக்கும் இவர், 2012-ம் ஆண்டு கர்நாடகத்தில் நடைபெற்ற கட்சித் தேர்தலின் பார்வையாளராக சென்றிருந்த போது அங்கே சில கிராமங்களில் பெரிய நிறுவனங்களின் பங்களிப் புடன் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்படு வதை அறிந்து வியந்தார். அதே போல் நமது ஊரில் செயல்படுத் தினால் என்ன? என யோசித்தார். அதனால் விளைந்ததே இந்த புதுமைத் திட்டம்.
ரூ.10 லட்சம் நிதியுதவியில்…
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவரே கூறுகிறார்: “2012-ம் ஆண்டு புள்ளம்பாடி பகுதியில் பரவிய மர்ம காய்ச்சலுக்கு குடிநீர் குறை பாடுதான் காரணம் என மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். அப் போதுதான் ஏன் இந்த திட்டத்தை நமது புள்ளம்பாடியில் தொடங்கக் கூடாது எனத் தோன்றியது.
உடனடியாக இதைப்பற்றி கர்நாடக மாநில உள்ளாட்சிதுறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அலுவலகத்தை அணுகி அங்கே செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் சுத்திகரிப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களையும், சுத்திகரிப்பு செய்யும் எதிர்மறை சவ்வூடுபரவல் இயந்திர மாடல்கள் பற்றியும் அதன் செயல்விளக்கங்களையும் தெரிந்துகொண்டேன்.
பின்னர் டெல்லிக்குச் சென்று அப்போதைய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர் அய்ய ரிடம் இதுகுறித்து பேசினேன்.
அவர் ஹிந்துஸ்தான் பெட் ரோலியம் கார்ப்பரேஷன் நிறு வனத்தின் சேர்மன் ராய் சௌத் ரிக்கு ஒரு பரிந்துரை கடிதம் கொடுத் தார். கார்ப்பரேட் நிறுவனங்களின் ‘கம்யூனிட்டி சோஷியல் ரெஸ் பான்சிபிலிட்டி’ நிதியிலிருந்து இந்த திட்டத்தை செயல்படுத்த உதவு மாறு அவர் பரிந்துரைத்திருந்தார். அதன்படி சில நிபந்தனைகளுடன் இந்த திட்டத்துக்கென ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கியது ஹெச்.பி.சி.எல்.
1 மணி நேரத்துக்கு 2 லட்சம் லிட்டர்
இந்த நிறுவனத்துடன் இணைந்து, இத்திட்டத்துக்கான பராமரிப்பு செலவை புள்ளம்பாடி பேரூராட்சி நிர்வாகமும், கண்காணிப்பு பணியை ‘கார்டு’ தொண்டு நிறு வனமும் மேற்கொள்ளும் வகை யில் முத்தரப்பு ஒப்பந்தம் செய்யப் பட்டது.
இதற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. 1 மணி நேரத்துக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீரை சுத்திகரித்து வழங்கக் கூடிய இயந்திரம் கர்நாடக மாநிலம் ஹூப்ளியிலிருந்து வரவழைக்கப் பட்டு இங்கே பேரூராட்சி அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் பயன் பாட்டுக்காக நிறுவப்பட்டுள்ளது” என்றார் ஜெயபிரகாஷ்.
பராமரிப்புக்கும், மின்சாரத்துக்கும்…
பேரூராட்சி செயல் அலுவலரான குணசேகரன், “தற்போது ஒரு ரூபாய்க்கு 5 லிட்டர் சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் தண்ணீர் வழங்கப்படு கிறது. 1 ரூபாய் காசைப்போட்டால் 5 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் குழாயில் வரும். இந்த இயந்திரத் தைப் பராமரிப்பது பேரூராட்சியின் பணி. பொதுமக்களுக்கு பொறுப் புணர்வு வேண்டும் என்பதற்காக வும் இயந்திரத்தை பராமரிக்கும் செலவு, மின்சாரக் கட்டணம் ஆகிய வற்றுக்காகவும்தான் இந்த கட்ட ணம் வசூலிக்கப்படுகிறது. தமிழத் தில் முதன்முறையாக எங்கள் பகு தியில் செயல்பாட்டுக்கு வந்திருப் பது பெருமையளிக்கிறது. ஈராண்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது என்றார்.
வரப்பிரசாதம்…
புள்ளம்பாடி பகுதி மக்கள் நல்ல குடிநீருக்காக ஆண்டுக்கணக்கில் தவமாய் தவமிருந்திருக்கிறார்கள். 20 கி.மீ. தொலைவிலிருந்து 30 ஆண்டுகளுக்கு முன்பு போடப் பட்ட பைப்லைன் வழியே கொள் ளிடத்திலிருந்து குடிநீர் கொண்டு வரப்பட்டு இந்த பேரூராட்சி மக்களுக்கு விநியோகிக்கப்படு கிறது. பைப்லைன் உடைந்து பல நாட்களாக விநியோகம் பாதிக் கப்படும்.
சில நாட்கள் மின்மோட்டார் பழுதடைந்து சிரமம் கொடுக்கும் இப்போது ஆழ்துளை கிணற்று நீர் சுத்திகரித்து தடையின்றி வழங்கப்படுவதால் இப்பகுதி மக்களுக்கு இந்த திட்டம் ஒரு வரப்பிரசாதம்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT