Published : 24 Oct 2013 11:04 AM
Last Updated : 24 Oct 2013 11:04 AM
இதோ வருகிறது… அதோ வருகிறது என்று போக்குக் காட்டிக் கொண்டிருந்த சிறிய பஸ்கள், சென்னை மற்றும் புறநகரில் புதன்கிழமை முதல் ஓடத் தொடங்கியுள்ளன. இதற்கு பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருப்பதால், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று போக்குவரத்துத் துறையினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
சென்னையில் 100 சிறிய பஸ்கள் இயக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, ஓராண்டுக்குப் பிறகு, முதன்முதலாக 50 பஸ்கள் தற்போது இயக்கப்படுகின்றன. புறநகர் மற்றும் பஸ், ரயில் போக்குவரத்து இல்லாத நகரின் கடைக்கோடி பகுதிகளுக்கும் இந்த பஸ்கள் இயக்கப்படுவதால், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கிறது. இதர பகுதிகளில் உள்ள மக்களும் தங்கள் பகுதிக்கு சிறிய பஸ்களை அரசு இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், மேலும் 50 சிறிய பஸ்களை நவம்பர் மாதத்தில் இயக்க மாநகர போக்குவரத்துக் கழகத்தினர் திட்டமிட்டுள்ளனர். இது குறித்து ஒரு அதிகாரி கூறுகையில், “50 சிறிய பஸ்களுக்கு பாடி கட்டும் பணி நடந்து வருகிறது. புதிய வழித்தடங்களும் இறுதி செய்யப்பட்டு வருகின்றன. அடுத்த மாதத்தில் மீதமுள்ள 50 பஸ்களும் இயக்கப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT