Published : 14 Feb 2014 12:00 AM
Last Updated : 14 Feb 2014 12:00 AM

நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு ரூ.502 கோடி

நகர்ப்புற மற்றும் கிராமப்புற வறுமை ஒழிப்புக்காக மாநில வாழ்வாதார இயக்கத் திட்டத்தில், வரும் நிதியாண்டுக்கு ரூ.502.97 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தில் கிராமப்புற வறுமையை ஒழிக்க கடந்த 2012-13ம் ஆண்டு முதல், தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கம், தமிழகக் கிராமப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்படுகிறது.

மொத்தமுள்ள 385 வட்டாரங்களில், 4,170 கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய 120 வட்டாரங்களில் உலக வங்கி உதவியுடன் புதுவாழ்வு திட்டமும், மீதமுள்ள 265 வட்டாரங்களில், 8,354 கிராமங்களில் தமிழக கிராமப்புற வாழ்வாதார இயக்கமும் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்.

இந்த திட்டத்தில் 161 குழுமங்கள் உருவாக்கப்பட்டு, நடப்பு ஆண்டில் 6,000 கோடி ரூபாய் கடன் வழங்க வசதி செய்யப்பட்டு, இதுவரை 3,847.07 கோடி ரூபாய் கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது. திறன் மேம்பாட்டு முகாம்கள் மூலம் 14,050 இளைஞர்கள் பயன் பெற்றுள்ளனர்.

வரும் நிதியாண்டில், கிராமப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு 253.92 கோடி ரூபாயும், புதுவாழ்வுத் திட்டத்துக்கு 49.05 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.

நகரப்பகுதிகளில் சுமார் 17.28 லட்சம் குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன.

நகர்ப்புற வறுமையை எதிர்கொள்ள தமிழக நகர்ப்புற வாழ்வாதார இயக்கமும், மத்திய அரசின் சுவர்ண ஜெயந்தி ஸகாரி ரோஜ்கார் யோஜனா திட்டமும் செயல்படுகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்துக்கு வரும் நிதியாண்டில் 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்

பட்டுள்ளது. இதில் ஆதரவற்றோருக்கு 62 புதிய காப்பிடங்கள் ஏற்படுத்தவும், 45 காப்பிடங்களை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x