Published : 20 Jun 2016 08:39 AM
Last Updated : 20 Jun 2016 08:39 AM
சென்னை மாநகரில் மின் தட்டுப் பாட்டை சமாளிப்பதற்காக 12 இடங்களில் துணை மின் நிலை யங்கள் நிறுவும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி கள் 3 முதல் 6 மாதங்களுக்குள் நிறைவடையும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துணை மின் நிலையங்கள் பற்றாக்குறையால் உற்பத்தியா கும் மின்சாரத்தை முழுமையாக பெற்று விநியோகம் செய்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தமிழ்நாடு மின்வாரியம் வர்த்தகம் மற்றும் வீடுகளில் 2 கோடிக்கும் மேற்பட்ட இணைப் புகளை கொண்டு செயல்பட்டு வருகிறது. அனல் மற்றும் புனல் மின் நிலையங்கள், காற்றாலை, மத்திய தொகுப்பு, தனியார் மின்னுற் பத்தி நிலையங்கள் உள்ளிட்ட வற்றில் பெறப்படும் மின்சாரத்தை துணை மின் நிலையங்களுக்கு கொண்டு வந்து அவை மூலம் விநியோகம் செய்யப்படுகிறது.
இதற்காக 400, 230, 110, 66, 33 கிலோ வோல்ட் திறன்கொண்ட துணை மின் நிலையங்கள் சென்னை முழுவதும் அமைக்கப் பட்டுள்ளன. இருப்பினும் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை பெறும் போது ஓவர் லோடு காரணமாக அவை அடிக்கடி பழுதாகின்றன. இதனால் பல்வேறு இடங்களில் அடிக்கடி மின்வெட்டும் ஏற்படு கிறது. இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக உயர் அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சென்னை மாநகரில் மின் நுகர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை சமாளிக்க மின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தற்போது 2 ஆயிரத்து 500 மெகாவாட் மின்சாரம் விநியோகம் செய்யப் பட்டு வருகிறது.
இந்நிலையில், மின்நுகர்வு தேவையை சமாளிக்கும் விதத்தில் மணலி, ஒக்கியம்பாக்கத்தில் தலா ரூ.140 கோடி செலவில் 400 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின்நிலையங்கள் அமைக் கப்பட்டு வருகின்றன. அதேபோல், மாம்பலம், ராஜா அண்ணாமலை புரத்தில் தலா ரூ.40 கோடி செலவில் 230 கிலோ வோல்ட் திறனும், பள்ளிக்கரணை, நெற்குன்றத்தில் தலா ரூ.10 கோடி செலவில் 110 கிலோ வோல்ட் திறனும், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம், எழில்நகர், திருமங்கலம், ராயப் பேட்டை, அண்ணாநகர் ஆகிய இடங்களில் தலா ரூ.5 கோடி செலவில் 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட துணை மின் நிலையங் கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் இன்னும் 3 முதல் 6 மாதங்களுக்குள் முடிவடைந்துவிடும்.
இவ்வாறு மின்வாரிய உயர் அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT