Published : 23 Jul 2016 02:46 PM
Last Updated : 23 Jul 2016 02:46 PM

மாணவருக்கு ஒரு மரம் வளர்ப்பு திட்டம்: சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் சாதிக்கும் திண்டுக்கல் அரசுப் பள்ளி

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகேயுள்ளது எஸ்.பாறைப்பட்டி. இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 160 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். ஆசிரியர்கள் 8 பேர் பணிபுரிகின்றனர். இந்த கல்வியாண்டில் முதல் வகுப்பில் பள்ளியில் 19 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களை வரவேற் கும் விதமாக பள்ளியின் சுற்றுச் சூழல் விழிப்புணர்வு மன்றம் சார்பில் ஒவ்வொருவருக்கும் ஒரு மரக்கன்று வழங்கப்பட்டது.

இதை பள்ளி வளாகத்தில் அவர்களை கொண்டே நடப்படுகிறது. இந்த மரக்கன்றுகளை இவர்கள் தினமும் பள்ளிக்கு வரும்போதும், செல்லும்போது பரா மரிக்கிறார்கள்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியரும், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப் பாளருமான ராமு கூறியதாவது: முதல் வகுப்பு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி பராமரிக்க செய்வதன் மூலம் மரங்களின் அவசியம், சுற்றுச்சூழலை காப்பது குறித்து அவர்களின் மனதில் பதிவு செய்யும் முயற்சிதான் இது. மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவது இவர்களுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் முதல்வகுப்பு மாணவர்களுக்கு உதவ பிற மாணவ, மாணவிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். தினமும் அவர்களுடன் சென்று புதியமா ணவர்கள் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் ஊற்றுவர். இதன் மூலம் புதியவர்களுக்கு மரம் வளர்ப்பதில் ஆர்வம் ஏற்படும்.

இங்கு படிக்கும் மாணவ, மாணவிகள் அனைவரும் மரக்கன்றுகளை வளர்க்கின்றனர். சிலர் வீட்டின் முன்பும், சிலர் பள்ளிக்கு வரும் வழியிலும் மரக்கன் றுகளை நட்டுள்ளனர். பள்ளிக்கு சென்று விட்டு வீடுதிரும்பும் வழியில் மரக்கன்றுகளை பரமாரிக் கின்றனர்.

அவர்களுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடமிருந்து இலவசமாக மரக்கன்றுகளை பெற்று வழங்கினோம். கூடுதலாக மரக் கன்றுகளை கேட்டாலும் மாண வர்களுக்கு வழங்குகிறோம். ரெட்டியார் சத்திரத்தில் உள்ள தோட்டக்கலை பண்ணைக்கு மாணவர்களை அழைத்துச்சென்று காண்பித்தோம். இந்த இளம் வயதிலேயே இவர்கள் மனதில் சுற்றுச்சூழல் குறித்தும் மரம் வளர்ப்பதன் அவசியம் குறித்து தெரிந்துகொள்ளச்செய்வதே இதன் நோக்கம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x