Published : 02 Aug 2016 09:29 AM
Last Updated : 02 Aug 2016 09:29 AM
தமிழகத்தில் ஆக்கிரமிப்பு செய் யப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளை அந்தந்த பகுதி விவசாயிகளைக் கொண்டே மீட்டெடுக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளதுடன், அதற்கான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது தஞ்சாவூர் மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் இயக்கம்.
ஆக்கிரமிப்புகளை அகற்றி நீர் நிலைகளைப் பாதுகாத்து பயன் படுத்த வேண்டிய கடமை நம் ஒவ் வொருவருக்கும் உள்ளது என்பதை அனைவரும் அறிந்து செயலாற்ற வேண்டும் என்பதற்கா கவே இந்த இயக்கத்தை தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து, இயக்கத்தின் தலை வர் சுவாமிமலை சுந்தர விமல்நாதன், 'தி இந்து'விடம் கூறியதாவது:
ஒரு பொதுநல வழக்கில், நீர் நி லைகளைப் பாதுகாக்க சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுத லின் அடிப்படையில் தமிழக அரசு 4.12.2014-ல் அரசாணை எண் 540-ஐ வெளியிட்டது. இதன்படி, தங்க ளது பகுதிகளில் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு வட்டாட்சியருக்கு மனு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில்தான், நாங்கள் தற்போது 'கைகள் கோர்ப்போம், கரைகள் காப்போம்' என்ற கோஷத்துடன் நிலம், நீர், நீதி அமைப்புடன் இணைந்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று, வட்டாட்சியருக்கு மனு செய்வதற்கான மாதிரிப் படிவத்தை விவசாயிகளுக்கு வழங்கும் பணியை ஜூலை மாதம் தொடங் கினோம்.
நெய்வேலி, தஞ்சாவூர், அரி யலூரில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சிகள், கோவையில் நடைபெற்ற வேளாண் கண்காட்சி மற்றும் திருச்சி, பெரம்பலூர் உள் ளிட்ட மாவட்ட ஆட்சி யர் அலுவல கங்களில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டங்கள், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினை வுநாளில் பேக்கரும்பு கிராமத்தில் என பல பகுதிகளில் விவசாயிகளுக்கு இந்த மாதிரி படிவத்தை வழங்கி யுள்ளோம். இதுவரை ஏறத்தாழ 8,000 படிவங்கள் வழங் கப்பட்டுள்ளன.
தொடர்ந்து, சென்னை தவிர அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று விவசாயிகள் குறைதீர் கூட்டங்களில் பங்கேற்கும், விவ சாயிகளுக்கு இந்த படிவங்களை வழங்கத் திட்டமிட்டுள்ளோம்.
மேலும், இந்த படிவம் வேண் டுவோரும், சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ளவும் 94420 60608, 91509 07492 ஆகிய செல்போன் எண்களிலும், thanjairti@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்புகொள்ளலாம்.
கடந்த ஆண்டு ஏப்.4-ம் தேதி தஞ்சாவூருக்கு வந்த, மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், "உள்ளூர் நீர் நிலைகளை மீட்டெடுத்தாலே 35% தண்ணீர் தேவையை நாம் பூர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கான இயக்கத்தை முன் னெடுங்கள்" என அறிவுறுத்தி னார். அதைத் தொடர்ந்தே இந்த இயக்கத்தை தொடங்கியுள்ளோம் என்றார்.
வட்டாட்சியருக்கு மனு செய்வதற்கான மாதிரி படிவங்களை, பேக்கரும்பில் விவசாயிகளுக்கு வழங்கும் சுவாமிமலை சுந்தர விமல்நாதன் மற்றும் ஆர்வலர்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT