Published : 26 Dec 2013 10:49 AM
Last Updated : 26 Dec 2013 10:49 AM
இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள ராணுவ முகாமை படம் பிடித்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை ராணுவத்தின் தீவிர கண்காணிப்பில் உள்ள கிளிநொச்சி ராணுவ முகாமை அந்த நபர் படம் பிடித்த போது அவரை கைது செய்ததாக, கிளிநொச்சி காவல்துறை செய்தி தொடர்பாளர் அஜித் ரோஹன்னா தெரிவித்துள்ளார். ராணுவ முகாம், போரினால் சிதிலமடைந்த கட்டடங்கள், சாலைகள் ஆகியனவற்றை அந்த நபர் வீடியோ எடுத்துள்ளதாகவும் ரோஹன்னா தெரிவித்துள்ளார்.
24 வயது நிரம்பிய அந்த இளைஞர், டூரிஸ்ட் விசாவில் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். விசா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட அவரை குடியேற்ற அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டதாகவும் போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
ஜனவரி 2009-ஆம் ஆண்டு வரை கிளிநொச்சி விடுதலைப் புலிகளின் நிர்வாக தலைநகராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT