Published : 13 Jun 2016 11:48 AM
Last Updated : 13 Jun 2016 11:48 AM
முதுகுளத்தூர் தொகுதியை கைப்பற்றத் தவறியதால் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளர் தர்மர் பதவி பறிக்கப்பட்டு அமைச்சர் மணிகண்டனிடம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானையில் அதிமுகவும், முதுகுளத்தூரில் காங்கிரஸூம் வெற்றி பெற்றது. இதில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக மருத்து வர் அணி மாநில துணைச் செயலாளர் டாக்டர் மணிகண்டன் மாவட்டத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாவை 33,222 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இளம் வயதிலேயே தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவியேற்றுள் ளார்.
இந்நிலையில், மாவட்டத்தில் சீனியர் பலர் இருந்தும் மாவட்டச் செயலாளர் பதவியும் டாக்டர் மணிகண்டனுக்கு கிடைத்துள்ளது.
ராமநாதபுரத்தை பூர்வீகமாகக் கொண்ட மணிகண்டன், அதிமுக குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை செ.முருகேசன் மாவட்ட அவைத் தலைவராக உள்ளார். இவரது அண்ணன் சசிக்குமார் மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராகவும், அண்ணன் மனைவி கவிதா சசிக்குமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளராகவும் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி துணைத் தலைவராகவும் உள்ளனர்.
இந் நிலையில், அதிமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறிய தாவது: ராமநாதபுரம் மாவட்ட அதிமுக செயலாளராக இருந்த தர்மர், தனது சொந்த தொகுதியான முதுகுளத்தூரை கைப்பற்றத் தவறி விட்டார். மேலும் முதுகுளத்தூர் தொகுதியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு இடம் கொடுக்காமல் பரமக்குடியைச் சேர்ந்த கீர்த்திகா முனியசாமியை கட்சித் தலைமை வேட்பாளராக நிறுத்தியது அவர்களிடையே கசப்பை ஏற்படுத்தியது.
இதில் முன்னாள் எம்எல்ஏ முருகன், மாவட்டச் செயலாளர் தர்மர், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருங்கி ணைந்து பணியாற்றி கீர்த்திகா முனியசாமியை வெற்றி பெற வைக்கவில்லை எனக் கட்சித் தலைமை கருதியது.
அதிமுக வசம் இருந்த முதுகுளத் தூர் தொகுதியை கைப்பற்றத் தவறியதால் மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து தர்மர் நீக்கப்பட்டார். முன்னாள் மாவட்டச் செயலாளர்கள் ஜி.முனியசாமி, ஆணிமுத்து, சுந்தரபாண்டியன், எம்.ஏ.முனியசாமி, முன்னாள் எம்எல்ஏ முருகன் உட்பட பலர் மாவட்டச் செயலாளர் பதவியை பெற முயற்சித்தனர்.
ஆனால், கட்சித் தலைமையிடம் இருந்த செல்வாக்கு, முதல்வரின் தோழி சசிகலா குடும்பத்தினருடன் உள்ள நெருக்கத்தால் அமைச்சர் மணிகண்டன் ராமநாதபுரம் மாவட் டச் செயலாளர் பதவியையும் தட்டிச்சென்றார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT