Published : 30 Jan 2014 09:02 PM
Last Updated : 30 Jan 2014 09:02 PM
மத்திய அமைச்சர் நாராயண சாமி வீட்டருகே பைப் குண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுவை மாநில காங்கிரஸ் கட்சி வரும் பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி பந்த் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் கூறியதாவது:
மத்திய அமைச்சர் நாராயண சாமி வீட்டுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. புதுவையை ஆளும் என்.ஆர். காங்கிரஸ் அரசின் கீழ் சட்டம் ஒழுங்கு சீரழிந்துள்ளது.
வெடிகுண்டு கலாசாரத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சி சார்பில் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பந்த் போராட்டம் நடத்தப்படும்.
இதில் அனைத்து கடைகளையும் மூடி ஒத்துழைக்குமாறு வர்த்தகர்களை கேட்க உள்ளோம் என்றார் சுப்பிரமணியன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT