Published : 14 Apr 2017 11:00 AM
Last Updated : 14 Apr 2017 11:00 AM
காவல்துறை கேன்டீன்களில் வரிச்சலுகையில் பொருட்கள் வாங்க ‘பார் கோடு’ அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்பட் டுள்ளது.
தமிழக காவல்துறையில் 1 லட்சத்து 3 ஆயிரம் பேரும், சிறைத் துறையில் 18 ஆயிரம் பேரும், தீயணைப்புத் துறையில் 17 ஆயிரம் பேரும், வனத்துறை யில் 11 ஆயிரம் பேரும் பணி யாற்றுகின்றனர்.
47 இடங்களில்
சீருடைப் பணியாளர்கள் வாட் வரிச் சலுகையில் வீட்டு உபயோகப் பொருட்களை வாங்க 32 மாவட்டங்களில் 47 இடங்களில் அங்காடிகள் (போலீஸ் கேன்டீன்) செயல்படுகின்றன. இங்கு 4 துறைகளைச் சேர்ந்த சீருடைப் பணியாளர்கள், இத்துறைகளில் ஓய்வுபெற்ற பணியாளர்கள் பலசரக்கு பொருட்கள் தவிர, கார், பைக், எலெக்ட்ரானிக்ஸ் உட்பட பிற பொருட்களை சலுகை விலையில் பெறுகின்றனர்.
காவலர் முதல் முதன்மைக் காவலர் வரை மாதத்துக்கு ரூ.5 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.70 ஆயிரம் வரையிலும், எஸ்ஐ முதல் கூடுதல் டிஎஸ்பி வரை மாதம் ரூ.8 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.1 லட்சத்துக்கும், எஸ்பி முதல் அதற்கு மேல் உள்ள அதிகாரிகள் மாதம் ரூ.10 ஆயிரம், ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலும் தேவையான பொருட்களை வாங்கலாம்.
இதுவரை காவலர்கள் தங்க ளின் பணி எண்களை சொல்லி பொருட்களை வாங்கினர். அதற் குப் பதிலாக பிரத்யேக போலீஸ் அங்காடி அடையாள அட்டை களை வழங்க டிஜிபி நட வடிக்கை எடுத்தார். இதன்படி காவலர், அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட விவரங்கள், புகைப்படங் களை ஆன்லைனில் ஒருங்கி ணைத்து ‘பார் கோடு’ வசதியுடன் இந்த அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளன.
முறைகேடு நடக்காது
இந்த அட்டை மூலம் 47 அங்காடி களிலும் நிர்ணயித்த தொகைக்கு பொருட்களை வாங்கலாம். இதில், முறைகேடு நடக்க வாய்ப்பு இல்லை. பணி மாறுதலின்போது, அந்தந்த பகுதி அங்காடிகளில் பொருட்களை வாங்கலாம். இத் திட்டம் காவலர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “காவல் துறை கேன்டீனுக்கு கூடுதல் டிஜிபி (வெல்ஃபர்) அலுவலக வழிகாட்டுதலில் 120 நிறுவனங் களில் இருந்து பொருட்களை கொள்முதல் செய்கிறோம். இந்த கேன்டீனில் இருந்து கார், இருசக்கர வாகனங்களை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையும், டிவி, வாசிங் மெஷின், பிரிஜ், ஏ.சி. ஆகியவற்றை 2 ஆண்டு களுக்கு ஒரு முறையும் வாங்க லாம். பிற பொருட்களை நிர்ண யிப்பட்ட தொகைக்கு வரிச் சலுகை யுடன் எப்போது வேண்டுமானாலும் பெறலாம்.
தற்போது சீரூடைப் பணி யாளர்களில் 40 சதவீதம் பேர் இந்த அட்டையை பெற்றுள்ளனர். கடந்த 10-ம் தேதி முதல் இந்த அட்டையை பயன்படுத்தி பொருட்களை பெறும் முறை தொடங்கப்பட்டுள்ளது. அட் டையை பெற விரும்புவோர், தாங்கள் பணியாற்றும் காவல் நிலையங்களில் விண்ணப் பத்தைப் பெற்று பூர்த்திசெய்து தரலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT