Published : 21 Mar 2017 08:40 AM
Last Updated : 21 Mar 2017 08:40 AM
ஆர்.கே.நகர் தொகுதியில் திறப் பதாக இருந்த சென்னை மாநக ராட்சியின் அம்மா வாரச் சந்தை திட்டம் கிடப்பில் போடப் பட்டுள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த தொகுதியில் அம்மா வாரச் சந்தையை திறப்பதற்காக பல லட்சம் செலவில் தயார் செய்யப் பட்ட இடம், வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
சென்னையில் பொதுமக்களின் அன்றாட உணவுக்கு தேவையான காய்கறிகள், தானிய வகைகள், மளிகைப் பொருட்கள், இறைச்சி உள்ளிட்ட பொருட்கள் எதுவும் சென்னையில் உற்பத்தி செய்யப் படுவதில்லை. அனைத்தும் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டு வர வேண்டியுள்ளது. அதனால் அந்த பொருட்கள் சென்னையில் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன.
இந்நிலையில், சென்னை மாநகர மக்களுக்கு இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல், மிகக் குறைந்த விலையில் 1,256 வகையான பொருட்களை விற்க, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் அம்மா வாரச்சந்தை தொடங்கப்படும் என்று மேயராக இருந்த சைதை துரைசாமி கடந்த 2014-ல் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்.
அந்த வாரச் சந்தையில் 25 அரசுத் துறைகள், 45 வங்கிகள் சார்பில் 200 கடைகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த திட்டத்தை 2016-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்ன தாக செயல்படுத்த திட்டமிட்ட நிலையில், பல்வேறு காரணங் களால் தடைப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபரில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் ஆர்.கே.நகர் தொகுதியில், கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் அருகில் திறக்க முடிவு செய்யப்பட்டது. அதற்காக அங்கு சுமார் 700 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம் கொண்ட, மாநகராட்சிக்கு சொந்தமான இடம், பல லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது.
முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உடன் அந்த திட் டத்தை அறிவித்த சைதை துரை சாமியின் மேயர் பதவிக் காலம் முடிவுக்கு வந்தது, உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பெருமை சேர்க்கும் இந்த திட்டத்தை மாநக ராட்சி நிர்வாகம் முன்னெடுத்து சென்றால், ஆளுங்கட்சி பிரதி நிதிகளின் கோபத்துக்கு ஆளாகி விடுவோமோ என மாநகராட்சி நிர்வாகம் அஞ்சுவது உள்ளிட்ட பல காரணங்களால் அந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதனால், ஆர்.கே.நகர் தொகு தியில் அம்மா வாரச்சந்தையை திறக்க தயார் செய்யப்பட்ட இடம் தற்போது வாகன நிறுத்துமிடமாக மாறியுள்ளது.
இது தொடர்பாக ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த பொன்மலர் கூறும்போது, “முதல்வர் தொகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், ஆர்.கே.நகர் தொகுதியில் முதலில் திறக்க திட்டமிட்டனர்.
அங்கு ஊசி முதல் ஏசி வரை அனைத்து பொருட்களும் 30 சதவீதம் விலை குறைவாக கிடைக்கும். கிராமிய நடனங்களும் நடத்தப்படும் என்றெல்லாம் மாநகராட்சி அதிகாரி கள் தெரிவித்திருந்தனர். நாங்க ளும் வாரச்சந்தை எப்போது திறக்கப்படும் என்று ஆர்வமாக காத்திருந்தோம்.
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதி, மரணம் போன்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஜெயலலிதாவின் பெயரை முன்னிறுத்தும் இந்த அரசு, எங்கள் தொகுதியில் உடனடியாக அம்மா வாரச்சந்தையை திறக்க வேண்டும்” என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. மேலும் இத்திட்டத்தை பல துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டியுள்ளது. தற்போது ஆணையர் மற்றும் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தில், அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. அம்மா வாரச் சந்தை திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. விரைவில் செயல்படுத்தப்படும்” என்றார்.
இது தொடர்பாக மாநகராட்சி உயரதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, “மாநகராட்சி நிர்வாகம் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்நிலையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த போதிய நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. மேலும் இத்திட்டத்தை பல துறைகளை ஒருங்கிணைத்து செயல்படுத்த வேண்டியுள்ளது. தற்போது ஆணையர் மற்றும் தனி அதிகாரி கட்டுப்பாட்டில் உள்ள மாநகராட்சி நிர்வாகத்தில், அதுபோன்ற திட்டங்களை செயல்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது. அம்மா வாரச் சந்தை திட்டம் கிடப்பில் போடப்படவில்லை. விரைவில் செயல்படுத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT