Published : 30 Apr 2014 08:27 AM
Last Updated : 30 Apr 2014 08:27 AM
மின் வெட்டு காரணமாக மின்சார பயன்பாடும் கட்டணமும் வழக்கத் தைவிட அதிகமாகிறது என்றும் உற்பத்தி குறைந்து நஷ்டம் ஏற் படுவதாகவும் தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் தினமும் 2 முதல் 4 மணி நேரம்வரை மின் வெட்டு அமலில் உள்ளது. மின்சாரம் இல்லை என்றால் கட்டணம் குறை யும் என்றுதான் பலரும் கருதுகின்ற னர். ஆனால், மின்வெட்டு காரண மாக கட்டணம் அதிகரிப்பது தெரிய வந்துள்ளது. மின் கட்டணம் அதிகரிப் பதுடன் உற்பத்தியில் பாதிப்பு ஏற் படுவதாகவும் தொழிற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மின் நுகர் வோர் சங்கத் தலைவர் டி.பால சுந்தரம், ‘தி இந்து’விடம் கூறியதா வது: மின்சார விநியோகம் தொடர்ச் சியாக இருந்தால் மட்டுமே தொழில் துறையினர் தங்களது உற்பத்தியை வழக்கம்போல் தொடர முடியும். ஆனால், அடிக்கடி மின் தடை ஏற் பட்டாலோ, அறிவிக்கப்படாத நேரங் களில் மின்சாரம் தடை பட்டாலோ, வழக்கத்தைவிட மின்சார பயன்பாடு இரட்டிப்பாக அதிகரிக்கிறது.
உதாரணமாக, இரும்பு தொடர்பான தொழிற்சாலைகளில், இரும்பை நன்றாக காய்ச்சி, சுமார் 1,300 டிகிரி வெப்ப நிலைக்கு வந்த பிறகுதான், அதை தேவைப்பட்ட பொருள் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும். எதிர்பார்த்த வெப்ப நிலைக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில், திடீரென மின்சாரம் தடைபடுகிறது. இதனால், மீண்டும் அந்த இரும்பு குளிர்ந்த நிலைக்கு செல்கிறது. சில மணி நேரம் கழித்து மின்சாரம் வந்ததும், இரும்பை முத லில் இருந்து சூடாக்க வேண்டும்.
மின்சாரம் இல்லாத நேரங்களில் தொழிலாளர்கள் வேலையின்றி இருக்கின்றனர். ஆனால், அந்த நேரத்துக்கும் சேர்த்துதான் அவர் களுக்கு ஊதியம் கொடுக்க வேண் டும். இதுபோன்ற காரணங்களால் உற்பத்திக்கான செலவு அதிக ரித்து, உற்பத்தியான பொருளின் அளவு குறைகிறது. ஆனால் உற் பத்தியைவிட அதிக மின் கட்டணம் கட்ட வேண்டிய நிலை ஏற்படும். இப் படி பல பிரச்சினைகளை கூறலாம். அறிவிப்பில்லா மின் வெட்டால் தொழில்துறைக்கு பல வகையிலும் நஷ்டம் என்பதுதான் உண்மை.
இவ்வாறு பாலசுந்தரம் கூறினார்.
இதுகுறித்து, மின் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: மின்சார உற்பத்தி நிலையாக இருந்தால், மின் தடையை அமல்படுத்த வேண்டியதில்லை. ஆனால், உற்பத்தி நிலை நிமிடத்துக்கு நிமிடம் மாறுகிறது. இதனால், மின் தொகுப்பில் தொழில்நுட்ப பிரச்சினையின்றி பராமரிக்க மின் தடை அவசியமாகிறது.
மின் தடையால் தொழில்துறை க்கு மட்டுமல்ல, கடைகள் மற்றும் வீடுகளுக்கும் வழக்கத்தைவிட அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இன்வெர்ட்டர் கருவிகளுக்கு இரண்டு மடங்கு மின்சாரம் தேவைப் படுகிறது. இதனால், மின் வாரியத் துக்கான விநியோகத் தேவையும் அதிகரித்து, தட்டுப்பாடுக்கு மேல் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT