Published : 21 Aug 2016 01:00 PM
Last Updated : 21 Aug 2016 01:00 PM

தமிழகம் முழுவதும் முடங்கும் அபாயத்தில் ‘டெலிமெடிசன் உதவி மையம்’: விழிப்புணர்வு இல்லாததால் குறைந்த நபர்கள் மட்டுமே அழைப்பு

உலக சுகாதார அமைப்பின் தகவலின்படி வெறும் 35 சதவீத மக்களுக்கே அத்தியாவசிய மருந்துகளும், சுகாதார வசதிகளும் கிடைப்பதாகக் கூறப்படுகிறது. ஆண்டுதோறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் மருத்துவ ஆலோசனைகளும், விழிப்புணர்வும் அதிகம் தேவைப்படுகிறது. அதனால், கிராமப் புற மக்களும் பயனடையும் நோக்கத்தில் மருத்துவ சேவை எளிமையாக்கப்படவேண்டும் என்ற நோக்கத்துக்காகவே தமிழகத்தில் சென்னை உட்பட 32 மாவட்டங்களில் டெலிமெடிசன் மருத்துவ உதவி மையம் திட்டம் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி தொடங்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின்படி, பொது மக்கள் அவசர மருத்துவ உதவி, ஆலோசனைகளுக்கு, 104 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத் தால் இம் மைய ஊழியர்கள், பொதுமக்கள் கூறும் தகவல் அடிப்படையில் ஆலோசனை, தக வல்கள் பெற மருத்துவர்களிடம் பேச இணைப்பு கொடுக்கின்றனர். மருத்துவர்கள், இந்த உதவி மையத்தில் கண் தானம், ரத்த தானம், உடல்உறுப்பு தானம், மருத்துவமனைகள் சம்பந்தமான புகார், அவசர மருத்துவ ஆலோசனை, முதலுதவி, மன நல ஆலோனைகளை வழங்குவார்கள்.

இந்தத் திட்டம், 108 ஆம்பு லன்ஸ் சேவை திட்டம் போல் மிகுந்த பயனுள்ளதாக இருக்கி றது. ஆனால், 108 ஆம்புலன்ஸ் திட்டத்தைப்போல் 104 மருத்துவ உதவி மைய திட்டம் பிரபல மாகவில்லை. இந்த மையத்தை அணுகுவதற்கான விழிப்புணர்வு மக்களிடம் இல்லை. அதனால், 104 மருத்துவ உதவி மையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இந்த மருத்துவ திட்டம் எதிர்கா லத்தில் முடங்கும் அபாயம் ஏற்பட் டுள்ளது.

இந்த திட்டம் பற்றி மதுரை மக்கள் கண்காணிப்பகம் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மனித உரிமை பயிற்சி முகாமில் சுகாதார உரிமை சமூக செயற்பாட்டாளர் ஆனந்த ராஜ், தலைமையில் மதுரை பாத்திமா, லேடி டோக் மற்றும் சென்னை எத்திராஜ் கல்லூரி மாணவிகள் 14 பேர், ஆய்வு மேற் கொண்டனர்.

சமூக செயற்பாட்டாளர் ஆனந் தராஜ் கூறும்போது, ‘‘இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் ஒவ்வொரு மாவட்டங்களில் செயல் பாடுகள் பற்றி தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் ஆராயப்பட் டது. கடந்த 31.12.2013 முதல் 31.5.2016 வரையிலான 881 நாட்களில் வெறும் 6,91,805 பேர் மட்டுமே இந்த மருத்துவ உதவி மையத்தை மருத்துவ ஆலோ சனைக்காக அணுகி உள்ளனர். சென்னை மாநகரிலேயே அதிக பட்சமாக 87,795 பேர் மட்டுமே, கடந்த இரண்டரை ஆண்டில், இந்த மையத்தை அழைத்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக காஞ்சிபுரத்தில் 46,625 பேரும், திருவள்ளூரில் 45,377 பேரும், கோவையில் 44,222 பேரும் பயன்படுத்தி உள்ளனர் . இந்த வரிசையில் சுகாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கிய ராமநாதபுரம் கடைசி இடத்தை பிடித்துள்ளது. இம்மாவட்டத்தில் கடந்த இரண்டரை வருடத்தில் வெறும் 9,549 நபர்கள் மட்டுமே பயன்படுத்தி தமிழக அளவில் கடைசி இடத்தில் உள்ளனர்” என்றார்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “அழைப் போர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் சீராக உயர்ந்துள்ளது, குறையவில்லை” என்றார்.

விழிப்புணர்வு, விளம்பரம் இல்லை

சமூக செயற்பாட்டாளர் ஆனந்தராஜ் மேலும் கூறும்போது, “டெலிமெடிசன் (104) மருத்துவ உதவி மையம் திட்டம் வந்ததுகூட தெரியாமல் கோடிக்கணக்கான மக்கள் இருக்கின்றனர் என்பதற்கு இந்த அழைப்பு புள்ளிவிவரங்களே சான்று. 108, 100, போன்று இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு, இந்த மருத்துவ உதவி மையத்தை எந்த எண்ணுக்கு அழைக்க வேண்டும், அதன் நன்மைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. எந்த ஒரு திட்டத்தையும் அறிமுகப்படுத்துவதோடு அரசின் பங்கு முடிந்துவிடுவதில்லை. அத்திட்டங்கள் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் எளிமையாகவும், தரமாகவும் சென்றடைகிறதா என்பதை கண் காணிக்க வேண்டும். இந்த கண்காணிப்பு இல்லாததாலும் கிராமப்புற மக்கள் பயனடையாததாலும் எந்த நோக்கத்துக்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதோ அது நிறைவேறாமல் உள்ளது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x