Published : 21 Apr 2017 09:34 AM
Last Updated : 21 Apr 2017 09:34 AM
சென்னையில் கடந்த 4 மாதங்களில் 1,100-க்கும் மேற்பட்ட இடங்களில் தீப்பிடித்ததாக தீயணைப்பு கட்டுப் பாட்டு அறைக்கு அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பெரும் பாலானவை குப்பைகளுக்கு தீ வைப்பவர்களின் விஷமச் செயல் என்று புகார் எழுந்துள்ளது.
தீ விபத்து மீட்புக்கான இலவச தொலைபேசி எண் 101. இது கட்டுப்பாட்டு அறை எண்ணாகும். இந்த எண்ணுக்கு தகவல் கிடைத் ததும், உடனடியாக சம்பந்தப்பட்ட தீயணைப்பு அலுவலகத்துக்கு தகவல் கொடுக்கப்படும். வீரர்கள் விரைந்து சென்று தீயணைப்பு, மீட்பு பணியை மேற்கொள்வார் கள்.
சென்னையில் கடந்த ஜனவரி 1 முதல் இதுவரை இந்த எண்ணுக்கு 1,100-க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலான விபத்துகள் குப்பை தீ விபத்துகள் என கூறப்படுகிறது. இதுபற்றி தீயணைப்பு அதிகாரிகள் சிலர் கூறியதாவது:
தீ விபத்து என தகவல் கிடைத்த அடுத்த கணமே மீட்பு பணிக் காக விரைந்து செல்கிறோம். ஆனால், குப்பை தீ விபத்துகள் தொடர்பாகதான் 75 சதவீதத் துக்கு மேற்பட்ட அழைப்புகள் வருகின்றன. தெருவில் உள்ள குப்பைகளை மாநகராட்சி ஊழி யர்கள் தினமும் அகற்றுகின்றனர். ஆனால், சிலர் குப்பைகளைத் தெருக்களில் உள்ள குப்பைத் தொட்டியில் போடாமல், அருகே உள்ள காலி நிலங்களில் வீசுகின்றனர். நாளடைவில் அங்கு குப்பை தேங்கிய பிறகு, அதை அப்புறப்படுத்த சோம்பல்பட்டுக் கொண்டு, கொளுத்திவிட்டு, தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கின்றனர். இது தவறானது, கண்டிக்கத்தக்கது.
இதனால், தீயணைப்பு வீரர்களின் உழைப்பு, வாகனச் செலவு வீணாகிறது. தவிர, அதே நேரத்தில் வேறொரு இடத்தில் உண்மையிலேயே தீ விபத்து சம்பவம் நேரிட்டால், அங்கு விரைந்து செல்ல முடியாத நிலையும் ஏற்படுகிறது.
இது மட்டுமின்றி, தீயை அணைக்கத் தேவையான தண்ணீரை சென்னை குடிநீர் வாரியத்திடம்தான் பெறுகிறோம். தற்போதைய வறட்சியான சூழலில், ஒரு வாகனத்துக்கு 9 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொடுப்பது அவர்களுக்கும் சிரமமாக உள்ளது. எனவே, வேண்டுமென்றே குப்பைக்குத் தீ வைத்துவிட்டு, தீயணைப்பு துறையினரை அலைக்கழிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள் கிறோம். இவ்வாறு விஷமச் செயல்களில் ஈடுபடுபவர்களை எச்சரித்தும் அனுப்புகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT