Published : 26 Apr 2017 12:55 PM
Last Updated : 26 Apr 2017 12:55 PM

திருப்பூர் முதலிபாளையம் டாஸ்மாக் பார் சூறை: பெண்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கைது

திருப்பூர் அருகே போராட்டம்

‘டாஸ்மாக்’ மதுபானக் கூடத்தை பொதுமக்கள் சூறை

85 பெண்கள் உட்பட 195 பேர் கைது

திருப்பூர்

திருப்பூர் அருகே முதலிபாளையம் சிட்கோ பேருந்து நிறுத்தப் பகுதியில் ‘டாஸ்மாக்’ மதுபானக் கடையை நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய பொதுமக்கள், திடீரென மதுபானக் கூடத்தை (பார்) அடித்து நொறுக்கினர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறிய தாவது:

திருப்பூர் அருகே முதலிபாளை யம் ஊராட்சி, சிட்கோ தொழிற் பேட்டை பேருந்து நிறுத்தப் பகுதி யில் ‘டாஸ்மாக்’ கடை செயல்பட்டு வருகிறது. சுற்று வட்டாரப் பகுதி களில் இருந்த டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட்டதால், கடந்த 3 வார காலமாக இந்தக் கடையில் கூட்டம் அதிகமாகக் கூடியது. பிரதான சாலையில் உள்ள இக்கடையால் அதிக அளவில் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது. அதிகாலை 3 மணி முதல் காலை 6 மணி வரை மது விற்பனை முறைகேடாக செய்யப்படுகிறது.

மதுபானக் கூட உரிமையாளரி டம் முறையிட்டால் அவரும் உரிய பதில் அளிப்பதில்லை. இந்த டாஸ் மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த சில வாரங்களுக்கு முன்பு சாலை மறியல் போராட்டம் நடத்தப் பட்டது.

ஆட்சியர், வருவாய் அலுவலர் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதை யடுத்து கடையை அகற்ற வலி யுறுத்தி அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம் என்றனர்.

‘டாஸ்மாக்’ உதவி மேலாளர் குணசேகரன் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ‘டாஸ்மாக்’ கடையையும், மது பானக் கூடத்தையும் திடீரென முற்றுகையிட்டனர். கடை பெயர்ப் பலகை, மதுபானக் கூடத்துக்குள் இருந்த மேஜை, நாற்காலிகளை உடைத்து எறிந்தனர்.

இதையடுத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸா ருடன், மாவட்ட அதிரடிப்படை போலீஸாரும் இணைந்து பொது மக்களை சமாதானப்படுத்தினர். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், துணை கண்காணிப் பாளர்கள் கிருஷ்ணசாமி, மனோ கரன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

டாஸ்மாக் உதவி மேலாளர் குணசேகரன், 3 மாதங்களில் கடையை இடமாற்றம் செய்வதாகக் கூறினார். ஆனால், கடையை உடனடியாக மூட வேண்டும் என பொதுமக்கள் கூறினர்.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் 85 பேர் உட்பட 195 பேரை போலீஸார் கைது செய்து, செங்கப்பள்ளி கோயில் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இது தவிர, போராட்டத்துக்கு தலைமை தாங்கிய 22 பேரிடம் தனியாக விசாரணை நடக்கிறது.

‘கடை செயல்படும்’

டாஸ்மாக் மாவட்ட மேலாளர் ராஜன், சம்பவம் நடைபெற்ற கடை, மதுபானக் கூடத்தை பார்வையிட்டு கூறியதாவது: சட்ட விதிகளின்படி இந்த கடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே இந்தக் கடை அகற்றப் படாது. 3 மாதங்களில் இடமாற்றம் செய்வதாக மக்களிடம் உறுதி யளித்தது பற்றி ஏதும் தெரியாது. தற்போதைய நிலையில் கடையை அகற்ற முடியாது என்றார்.

சம்பவ இடத்தை பார்வையிட்ட திருப்பூர் மாவட்ட எஸ்பி உமா கூறும்போது, ‘‘போராட்டத்தில் ஈடுபட்ட அனைவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x