Published : 14 Jul 2016 08:23 AM
Last Updated : 14 Jul 2016 08:23 AM
சட்டப்பேரவைத் தேர்தல் தோல் விக்கு பொறுப்பேற்று தமிழக காங் கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் ராஜினாமா செய்துவிட்டார். அவரது ராஜினாமா ஏற்கப்பட்டு 2 வாரங் களுக்கு மேலாகியும் இதுவரை புதிய தலைவர் நியமிக்கப்பட வில்லை.
கட்சித் தலைவர் சோனியா, துணைத் தலைவர் ராகுல் ஆகியோரை தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு திடீ ரென சந்தித்து பேசியுள்ளது, கட் சிக்குள் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
பிரமுகர்கள் சந்திப்புக்கான நேரத்தை கவனிப்பதற்காக சோனியா, ராகுல் வீடுகளில் தனிச் செயலர்கள் உள்ளனர். இவர்கள் தான் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்குகிறார்கள். புதியவர்களாக இருந்தால் அவரைப் பற்றிய முழு விவரங்களையும் இ-மெயிலில் கேட்டுப் பெற்று சோனியா, ராகுல் ஒப்புதல் பெற்ற பிறகே சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்படும்.
சோனியாவையும் ராகுலையும் சந்திக்க நேரம் கிடைக்காமல் பலர் நாள் கணக்கில் டெல்லியில் காத்திருக்கின்றனர். ஆனால், குஷ்பு உள்ளிட்டவர்கள் இவர்களை எளிதில் சந்தித்து பேசுகின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவரிடம் கேட்டபோது, ‘‘சோனியா, ராகுலை சந்திக்கும் சிலர், ஆக்கப்பூர்வமான விஷயங் களை எடுத்து வைப்பதில்லை. அதற்கு காரணம் மொழிப் பிரச் சினை. அதனால்தான் சிலருக்கு அப்பாயின்ட்மென்ட் தவிர்க்கப்படு கிறது. குஷ்பு அப்படி இல்லை. சொல்ல வேண்டிய விஷயத்தை இந்தி, ஆங்கிலம் இரண்டிலும் சரள மாகப் பேசி புரிய வைத்துவிடுகிறார். அவரது பாணி தலைமைக்கு பிடித்திருக்கிறது. அதனால்தான் அவருக்கு உடனுக்குடன் நேரம் ஒதுக்கப்படுகிறது’’ என்றார்.
இதுகுறித்து குஷ்புவிடம் கேட்டபோது, ‘‘அப்பாயின்ட்மென்ட் தருவதில் எனக்கென்று எந்த முக்கியத்துவமும் இல்லை. கட்சி யின் தேசிய செய்தித் தொடர் பாளராக இருப்பதால் உடனடி யாக நேரம் ஒதுக்கப்படலாம்’’ என்றார்.
ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறும்போது, ‘‘சந்திக்க வேண்டிய நபராக இருந்தால் அது யாராக இருந்தாலும் உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கிடைத்து விடும். சந்திக்கக் கூடாத நபர் களுக்கு எந்தப் பதிலும் தராமல் தவிர்க்கப்பட்டுவிடும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT