Published : 25 Sep 2016 11:04 AM
Last Updated : 25 Sep 2016 11:04 AM
இந்தியாவில் அலோபதி மருத்துவ முறைக்கு முன், அந்தந்தப் பகுதி களில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறைகளே மக்களின் நோய் தீர்க்க கைகொடுத்து வந்தன. தமிழகம் மற்றும் கேரளாவில் சித்த மருத்துவக் கலை மக்களுக்கு பெரும் தொண்டாற்றியது. சித்த மருத்துவத்துக்கும் முந்தைய காலத்தில் ஆதித்தமிழர்களின் மருத்துவ முறையாக விளங்கியது சிந்தாமணி மருத்துவம். தற்போது அழியும் நிலையில் உள்ள சிந்தாமணி மருத்துவத்தைக் காக்க வலியுறுத்தி, குமரியில் பரப்புரை நடந்து வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டம், குழித் துறை அருகில் உள்ள பரக்குன்று பகுதியைச் சேர்ந்தவர் புட்பராசு(63). அரசு சித்த மருந்தாளுநராக இருந்த இவர், சிந்தாமணி மருத்துவத்தின் மேல் உள்ள ஆர்வத்தால், விருப்ப ஓய்வு பெற்றவர்.
சிந்தாமணி மருத்துவ முறை இலங்கையை ஆண்ட ராவணன் இயற்றியது என்றும் இப்போதும் வட இந்தியாவில் அவரது பெயரி லேயே பல புத்தகங்கள் வெளியாகி உள்ளன என்றும் அதற்கான ஆவணங்களோடு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார் புட்பராசு.
இதுகுறித்து ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:
ராவணனின் குணநலன்கள் குறித்த ஆராய்ச்சிக்குள் நான் செல்ல வில்லை. ஆனால், ராவணன் ஒரு சிறந்த மருத்துவர். அவர் ஆராய்ந்து உருவாக்கியதுதான் சிந்தாமணி மருத்துவம். அவர் எழுதியபோது அது முழுக்க, முழுக்க தனித் தமி ழில்தான் இருந்தது. அதில் சமஸ்கிருதமோ, பிறமொழிச் சொல் கலப்போ கிடையாது. இது சித்த மருத்துவத்தைவிட பழமையானது.
சித்த மருத்துவத்தில் அகமருந்து கள் 32, புற மருந்துகள் 32 தான் உள்ளன. ஆனால் சிந்தாமணி மருத் துவத்தில் புற மருத்துவ முறைகள் 60-க்கு மேலும், அக மருத்துவ முறைகள் 50-க்கும் மேலும் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள் ளன. கோமாவுக்கு கூட இதில் சிகிச்சை உண்டு.
வட இந்தியாவில் பல பகுதி களில் ‘ராவண சம்ஹிதா’ என்னும் பெயரில் இந்த மருத்துவ முறை உள்ளது. வட இந்தியாவில் ஏராள மான புத்தகங்கள் ராவணன் உரு வத்தை அட்டைப்படத்தில் அச்சிட்டு, அவரது பெயரிலேயே மருத்துவ முறைகளோடு வெளிவந்துள்ளன. ராவண மருத்துவ நுட்பங்கள் தனித் தமிழில் எழுதப்பட்டிருந்தாலும், சமஸ்கிருதம், மலையாளம், தெலுங்கு, இந்தி, உருது, சிங்க ளம் என பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
சித்த மருத்துவத்தில் விபத்து கால வர்ம சிகிச்சை முறைகள் இல்லை. அதே நேரத்தில் ராவண மருத்துவத்தில் விபத்து கால சிகிச்சைகளுக்கு கூட தீர்வு உண்டு. முதுகெலும்பு வளைவு, இடுப்பு எலும்பு தேய்மானம், எலும்பு முறிவு, மூளையில் ரத்தக் கசிவு போன்ற நோய்களுக்கும் இதில் தீர்வு உண்டு.
ராவணன் எழுதிய இந்த சிந்தா மணி மருத்துவ முறையே குமரி மாவட்ட ஆசான்களால் பின்பற்றப் பட்டு, தற்போதையை சித்த மருத் துவமாக உருப்பெற்றது. இப் போதும் நெல்லையில் செய்யும் சித்த மருத்துவ முறைகளில் இருந்து மாறுபட்டது, குமரி மாவட்ட ஆசான் கள் பின்பற்றும் சித்த மருத்துவம்.
ராவணன் சிறந்த சிவ பக்தர். வீணை வாசிப்பில் கைதேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் மருத்துவத் துறையில் ராவணனின் பங்களிப்புகள் குறித்து வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழகத்தில் அழிந்து வரும் இந்த மருத்துவ முறை, இப்போது சில இடங்களில் மட்டுமே உள்ளது. தமிழக அரசு சித்த மருத்துவக் கல்லூரி பாடத் திட்டத்தில் இதனை சேர்க்க வேண் டும். அரசு இதுகுறித்து ஆய்வு செய்து, முழுத் திரட்டாக வெளிவர முயற்சி மேற்கொண்டால் அற்புத மான தமிழ் மருத்துவம் கிடைக் கும். தமிழக அரசு அதற்குரிய முயற்சிகளைத் தொடங்க வேண் டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT